செய்திகள் :

``அவரை இக்னோர் பண்ணுங்க... அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்" - சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!

post image

சென்னை காசிமேட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் TNPTC இணைந்து மானிய விலையிலான எரிபொருள் விற்பனை மையத்தை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், ``மீனவச் சகோதரர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் இந்த பங்க் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மார்க்கெட் விலையிலிருந்து சுமார் ரூ.15 வரை மீனவர்களுக்கு எரிபொருள் குறைவான விலையில் கிடைக்கும். இந்த பங்க் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, நல்ல முறையில் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடல் ஆம்புலன்ஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன." என்றார்.

சேகர் பாபு

தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், ``முதல்வர் விஜய் குறித்து ஆபசமாக பேசிய அதிமுக பெண் பேச்சாளர் பேச்சு என்பது திமுக டிஎன்ஏ-வின் மற்றொரு பிரதி. திமுக, அதிமுக, நாம் தமிழர் என எல்லாம் ஒரே டி.என்.ஏ தான். இதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை." தனுஷ் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் குறித்தும், ஒடிசா புயல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் சொல்லாமல் கடந்து சென்ற அமைச்சர் மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தவெக-வுக்கு பயம் வந்துவிட்டது எனக் கூறியிருந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் மரிய வில்சன், ``அவரை கண்டுகொள்ளாதீர்கள்... அவரை இக்னோர் செய்யுங்கள்... அவரும் அவருடைய ஸ்டேட்மெண்ட்டும்.." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு

நாளை (அக்டோபர் 27, 2026) இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் நடக்கும் முதல் தேர்தல் இது. தற்போது ஈரானுடன் போரில் மறைமுகமாக இருந்து வருகிறது இஸ்ரேல். இ... மேலும் பார்க்க

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் பரவலாக மழை ப... மேலும் பார்க்க

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தே இருமுடி கட்டிச் செல்வார்கள். அல்லது பம்பா கணபதி கோயில் வளாகத்தில் உள்ள கெட்டு நிறை மண்டபத்தில் இருமுடி கட்டிச் செல்வது வழக்... மேலும் பார்க்க

"குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?" - கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி தவெக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி."செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறு... மேலும் பார்க்க

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" - என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டிலும் க... மேலும் பார்க்க