செய்திகள் :

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

post image

கோவை மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காந்திபுரம், ரயில் நிலையம், வின்சென்ட் சாலை, உக்கடம், சுங்கம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

லங்கா கார்னர் சந்திப்பு, அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள ரயில்வே பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அடியில் ஓர் அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மோட்டார் பம்புகளைக் கொண்டு மழை நீர் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வின்சென்ட் சாலை, புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதி, நஞ்சாண்டாபுரம், செளரிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

இதேபோல தொடர் மழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலும் வெள்ள நீர் தேங்கியது. மேலும் வெளிநோயாளிகள் வார்டு, ரத்த பரிசோதனை கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையாளருடன் அமைச்சர் சம்பத் குமார் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தே இருமுடி கட்டிச் செல்வார்கள். அல்லது பம்பா கணபதி கோயில் வளாகத்தில் உள்ள கெட்டு நிறை மண்டபத்தில் இருமுடி கட்டிச் செல்வது வழக்... மேலும் பார்க்க

"குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?" - கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி தவெக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி."செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறு... மேலும் பார்க்க

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" - என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டிலும் க... மேலும் பார்க்க

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' - கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தினரின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். இதற்காகக் கொட்டும் மழையிலும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் காலை முதலே ... மேலும் பார்க்க

கேரளம்: பீஃப்-க்கு எதிரான வீடியோ; மத வெறுப்பைப் பரப்பிய வட இந்தியா Vlogger; வழக்கு பதிந்த போலீஸ்

வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் அம்ரித் சிங் டேரன்.இவர் கேரளா பயண வீடியோவைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் கேரளாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு அரபு நாடுகளிடமிருந்... மேலும் பார்க்க

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" - உதயநிதி சாடல்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு சன்னரகப் பொன்னி அரிசியாக த.வெ.க. அரசு விற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக... மேலும் பார்க்க