செய்திகள் :

Scene: "12 வருஷத்துக்குப் பிறகு நான் நடிக்கும் தமிழ் படம் இது!" - 'சீன்' பட விழாவில் நஸ்ரியா

post image

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Suriya - Scene Title Teaser
Suriya - Scene Title Teaser

'பேரழகன்' படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இப்படத்தின் நிகழ்வு துபாயிலுள்ள ஒரு மாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நஸ்ரியா பேசுகையில், " 12 வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி இயக்குநர் ஜித்து மாதவன்.

என்னுடைய சினிமா பயணத்தில் நான் கடந்து வந்த மிகவும் அற்புதமான அனுபவங்களில் ஒன்றாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருந்தது. சூர்யா சார், நஸ்லென் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நவம்பர் 6-ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று 'சீன்' திரைப்படத்தைப் பாருங்கள். படம் அடிப்பொலியாக வந்திருக்கிறது.

Nazriya Speech
Nazriya Speech

நாங்கள் சினிமாக்களை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே சூர்யா சாரைக் பார்த்து வளர்ந்திருக்கிறோம். நாங்களும் இதுபோன்று தீவிரமாக சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு சூர்யா சாரும் ஒரு முக்கியக் காரணம்.

அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன் நேரத்தைச் செலவழித்து இந்தப் படத்தில் பணியாற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி." என்றார்

Scene: " 'ழகரம் ஸ்டுடியோஸ்' தொடங்கியதற்கான காரணம்!?" - புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் ந... மேலும் பார்க்க

Jailer 2: ஷீலா கதாபாத்திரத்தை படத்தில் உருவக்கேலி செய்தார்களா? - விளக்குகிறார் நேன்சி திவ்யா

நேன்சி திவ்யா விக்ரம் என்பவர் ஸ்னாஸி தமிழச்சி (Snazyy Tamilachi) என்னும் சமூக இணையதளப் பக்கத்தின் மூலம் உருதோற்றதிற்கான நேர்மறை சிந்தனையையும், உருவ கேலிக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறா... மேலும் பார்க்க

Black Pandi: "என்னை உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்காதீர்கள்" - பிளாக் பாண்டி விளக்கம்

'கனா காணும் காலங்கள்', 'அங்காடித் தெரு' போன்ற தொலைக்காட்சி மற்றும் சினிமா படைப்புகள் மூலமாகப் பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி. இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், பிறகு உ... மேலும் பார்க்க

Scene: "அந்த இரண்டு போலீஸ் படங்களோடு இதை ஒப்பிட வேண்டாம்" - துபாயில் சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. Suriya - Scene Title Teaserமலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் மு... மேலும் பார்க்க

"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்

சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டிரோன்ஸ்'. இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!"- பேரரசு கூறியதென்ன?

இயக்குநர் பேரரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். தற்போத... மேலும் பார்க்க