செய்திகள் :

“திமுக-அதிமுக கூட்டணிக்குப் பேசவில்லை; தவெகவுடன்தான் பேசினோம்” - TTV தினகரன் ட்விஸ்ட்

post image

வருகிற 6-ம் தேதி, தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் களத்தில் பம்பரமாகச் சுற்றி வருகின்றன.

இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததால்தான், இந்த இரு தொகுதிகளும் தற்போது தேர்தலைக் காண்கின்றன.

தேர்தல்
தேர்தல்

இதனால், அதே வேட்பாளர்களை களத்தில் இறக்கி வெற்றி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது தவெக. எதிர்க்கட்சியாக இந்த இரு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேலை பார்த்து வருகிறது திமுக.

தங்களுடைய எம்.எல்.ஏக்கள்தான் பதவி விலகி, தவெகவில் சேர்ந்துள்ளதால், இந்தத் தேர்தல் அதிமுகவிற்குக் கௌரவப் பிரச்னை.

இப்படி மும்முனைப் போட்டியால்தான் தாராபுரம், மதுராந்தகம் களம் இருந்து வருகிறது.

பதவி விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர்தான் தவெகவின் வேட்பாளர்கள்.

இவர்கள் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்துவிட்டார்கள் என்கிற விமர்சனத்தோடுதான் பிரசாரக் களங்களில் இவர்களை மக்கள் அணுகுகிறார்கள்.

இதை மாற்றியமைக்க, ‘திமுக, அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதால், அதைப் பிடிக்காமல் இந்த இருவரும் பதவி விலகினார்கள்’ என்கிற கோணத்தில் இந்தப் பிரச்னையை தவெக மடைமாற்ற முயலுகிறது.

இந்த நேரத்தில் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புதிதாக ஒன்றைப் பேசியுள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், “திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க நினைத்தது... அதற்கு பாஜக ஆதரவு அளித்தது என்று யார் கூறுவதும் தவறு.

107 சீட்டுகளோடு தவெகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், தவெக உடன் கூட்டணி வைத்து, எங்களது கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நினைத்தோம்... முயன்றோம். ஆனால், ஒத்துக்கொள்ளப்படவில்லை. அதனால், திருமாவளவனை முதல்வராக்க நினைத்தோம்.

இதில் திமுகவும், பாஜகவும் சம்பந்தப்படவில்லை. இதைப் பலமுறை கூறிவிட்டோம். நான் இதை மே 8-ம் தேதி கூடச் சொல்லியிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

ஆக, இந்த இடைத்தேர்தல்கள் பிரசாரங்களில் புதுக்கோணம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார் தினகரன். இது கைக்கொடுக்குமோ... கொடுக்காதோ?

"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது என்ன?

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனம்.122 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் 12 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர். பல நூறு கிளைகள் கொண்ட இந்த நி... மேலும் பார்க்க

“இந்தியா பெருமிதம் கொள்கிறது”- கத்திக்குத்துப்பட்டும் பயணிகளைக் காப்பாற்றிய விமானிக்கு மோடி பாராட்டு

நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர். பயணத்திற்கு இடையே இரு விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்ப... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" - திருமாவளவன்

டெல்லியில் இன்று (30-ம் தேதி) 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ``இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர... மேலும் பார்க்க

INDIA BLOC: ``நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" - ராகுல் காந்தி

டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்), என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கூட்டணி கட்சிக... மேலும் பார்க்க

INDIA BLOC: ``மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும்!" - மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்), என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கூட்டணி கட்சிக... மேலும் பார்க்க