செய்திகள் :

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பைத் தடுக்க Gabion Wall தொழில்நுட்பத்தில் தடுப்புச் சுவர்!

post image

திருச்சி திருவானைக்காவல், திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை நேப்பியர் பாலம் வடிவிலான புதிய பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இப்பாலத்தின் அருகே ரயில்வே பாலம், உயர்மின் அழுத்த கோபுரங்கள், குடிநீரேற்ற கிணறுகள், குடிநீர் சுமந்து செல்லும் ராட்சத குழாய்களை தாங்கி நிற்கும் சிமென்ட் கான்கிரீட் தூண்கள் ஆகியவையும் உள்ளன. இவை அனைத்தும் வெள்ளக் காலங்களில் ஏற்படும் மண்ணரிப்பால் தொடர்ந்து சேதமடைந்து வந்தன.

இதன் அருகே 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த இரும்பு பாலம், 90 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உடைந்து விழுந்தது.

அப்பாலத்தின் எஞ்சிய பகுதிகள் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இடித்து அகற்றப்பட்டன.

பின்னர், அப்பகுதியில் மண்ணரிப்பைத் தடுக்க மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.7.5 கோடி செலவில் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தடுப்புச் சுவர் ஒன்று கட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியும் கொள்ளிடத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சுமார் 80 மீட்டர் நீளத்திற்கு உடைந்து சேதமடைந்தது. மேலும் அங்கு பிரமாண்ட பள்ளமும் உருவானதுடன், கரையோரம் இருந்த அழகிரிபுரம் படித்துறை, கருப்பண்ண சுவாமி கோயில் சுற்றுச்சுவர், உயர்மின் அழுத்த கோபுரங்கள் ஆகியவை ஆற்று வெள்ளத்தில் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இந்த நிலையில், அதனைச் சுற்றியுள்ள முக்கிய கட்டுமானங்களைப் பாதுகாக்கும் வகையில், நீர்வளத்துறை சார்பில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தடுப்புச் சுவர் உடைந்த இடத்தில், கேபியன் வால், குரோனெஸ் (Groynes) ஆகிய இரு தொழில்நுட்பங்களையும் இணைத்து சுமார் 120 மீட்டர் நீளம், 5 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இந்த நவீனத் தொழில்நுட்பத்தில் ஒன்றான கேபியன் வால் தொழில்நுட்பம் (Gabion Wall Technology) என்பது வலுவான அலுமினியம் மற்றும் இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட வலைப் பெட்டிகளுக்குள், பெரிய அளவிலான பாறைக் கற்களை அடுக்கிவைத்து நிரப்பி, அவற்றைத் தடுப்புச் சுவராக அமைக்கும் முறையாகும். இத்தகைய சுவரில் அடுக்கிவைக்கப்பட்ட கற்களுக்கு இடையே இடைவெளி இருப்பதால், வெள்ள நீர் எளிதாக ஊடுருவிச் செல்லும். இதனால் வெள்ளக்காலத்தில் இச்சுவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

குரோனெஸ் தொழில்நுட்பம் (Groynes Technology) என்பது ஆற்றங்கரையிலிருந்து நீரோட்டத்தை நோக்கி, சாய்வாக நீட்டித்து கட்டப்படும் நீண்ட தடுப்பு அமைப்புச் சுவராகும்.

இது ஆற்றங்கரை உடையாமலும் ஆற்று மணல் ஆற்றில் அடித்துச் செல்லாமலும் ஆற்றங்கரையைப் பாதுகாக்க பயன்படுகிறது.

புதிய வகையிலான தடுப்புச் சுவர் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

தடுப்புச் சுவர் இல்லாததால், கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் மட்டுமே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தடுப்புச் சுவர் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்தவுடன், நீரோட்டம் ஆற்றின் மையப்பகுதியை நோக்கித் திருப்பப்படும். இதனால் ஆற்றின் இருகரைகளிலும் வாழும் மக்கள் தண்ணீரைப் பெற்று பயன் பெற முடியும்.

கொள்ளிடம் ஆற்றில் முதன்முறையாக அமைக்கப்பட்டுவரும் இந்த நவீன தொழில்நுட்பக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் (அக்டோபர்) முழுமையாக நிறைவடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய நவீன கட்டுமானத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றின் மண்ணரிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டு, பாலங்கள் மற்றும் பிற கட்டுமானங்களின் நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படும் என்கிறார்கள்.

'சுவிட்ச் அழுத்தினால் ஆட்டோ' - விபத்தை தடுக்க கேரள ஓட்டுநர்கள் ஏற்படுத்திய சிம்பிள் தொழில்நுட்பம்

கேரள மாநிலம் கொச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளின் வசதிக்காக எளிய ‘வயர்லெஸ் காலிங் பெல்’ தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அது தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.​ தேசிய நெடுஞ்சாலை 66... மேலும் பார்க்க

MIT-யை விட்டு வெளியேறிய 19 வயது இளைஞர்... இன்று Meta-வின் AI பொறுப்பு! - அலெக்ஸாண்டர் வாங் யார்?

எம்.ஐ.டி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுத் தொழில்நுட்பத் துறையில் நுழைந்து, இன்று உலகத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார் அலெக்ஸாண்டர் வாங்... மேலும் பார்க்க

`இனி 28 நாள்கள், 84 நாள்கள் Recharge Pack எல்லாம் கிடையாது!' TRAI-ன் புதிய 'நிம்மதி' அறிவிப்பு

மொபைல் போன் ரீசார்ஜ் பேக்கேஜ்களில் பெரும்பாலான திட்டங்கள் 28 நாள்கள், 84 நாள்கள் என ரவுண்டாக இல்லாமல்தான் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், போன் பேசினால் மட்டும் போதும் என்பவர்கள் கூட, டேட்டா பேக்கேஜையும... மேலும் பார்க்க

``ஆய்வகத்துக்குள் இருந்த அறிவியல்… மக்கள் பார்வைக்கு!" - காரைக்குடி CECRI Open Day

ஒருபக்கம் Battery, Electrochemistry, Materials Science, Corrosion, Electrocatalysis, Green Hydrogen, Machine Learning என பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கங்கள்… இன்... மேலும் பார்க்க

அமெரிக்க அரசு இணையதளங்களை ஹேக் செய்ய முயன்ற AI ஏஜென்ட்டுகள்; Open AI நிறுவனத்தின் விளக்கம் என்ன?

அமெரிக்க அரசின் கல்வித்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட 3 முக்கியமான இணையதளங்களை OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட்டுகள் தன்னிச்சையாக ஹேக் செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.இந்தச் சம்பவம் தொ... மேலும் பார்க்க

AI: ``100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது" - எச்சரிக்கும் பில்கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு (AI) தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், அது உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச... மேலும் பார்க்க