செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை..." - என்ன சொல்கிறார் அண்ணாமலை?

post image

நேற்று திருப்பரக்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து 'We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன.

நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாகச் செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.

தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளைத் துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு.

நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.

ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றைக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.

அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது".

'கள்ளக்குறிச்சி கலெக்டர் மனமுடைந்து போயிருந்தார்!' - ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு வெளியிட்ட தகவல்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்ற நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், கோ - ஆப்டெக்ஸின் மேலாண்மை இயக்குனராக இருக்க... மேலும் பார்க்க

கருகும் பயிர்கள், கதறும் டெல்டா விவசாயிகள்! - பொய் சொல்லும் தேவகவுடா!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!காவிரி டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் மிகுந்த வேதனையிலும் ஆதங்கத்திலும் தவிக்கிறார்கள். ஆனால், ‘தமிழகத்திற்க... மேலும் பார்க்க

வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்... பதற்றம்... போர்க்களமான திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உச்ச நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: நெல்லையிலிருந்து மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் சாலையில் அதிரடி கைது |Photos

நெல்லையில் இருந்து மதுரை புறப்பட்ட பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாலையில் அதிரடி கைது.!திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" - நீதிபதி மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?" - சீமான்

"கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,... மேலும் பார்க்க