செய்திகள் :

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?" - சீமான்

post image

"கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக?

அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதைச் சாதிக்க நினைக்கிறார்?

கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்ட பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காகச் சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்.

பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்?

பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?

தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியரின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?

ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?

சீமான்
சீமான்

பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?

ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருப்பரங்குன்றம்: நெல்லையிலிருந்து மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் சாலையில் அதிரடி கைது |Photos

நெல்லையில் இருந்து மதுரை புறப்பட்ட பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாலையில் அதிரடி கைது.!திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" - நீதிபதி மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையோரம் குப்பைக் குவியல்; சுட்டிக்காட்டிய விகடன்; அகற்றிய ஊராட்சி நிர்வாகம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், பாய்ச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ருத்ரன் திருச்சபைக்கு முன்பு சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதனால் ... மேலும் பார்க்க

"பதவி விலகச் சொல்லுங்க..." - முதல்வருக்கு சீனியர் அமைச்சர்கள் அட்வைஸ்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் பூதாகரமாகி, த.வெ.க ஆட்சிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. எம்.எல்.ஏ மீது பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொடுத்திருக்கும் ஆபாச மெசேஜ் புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு ச... மேலும் பார்க்க

"தவெக MLA அருளைக் காப்பாற்ற முயன்ற முதல்வர் விஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன்

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னே... மேலும் பார்க்க

"கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம்

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளமும... மேலும் பார்க்க