செய்திகள் :

"பதவி விலகச் சொல்லுங்க..." - முதல்வருக்கு சீனியர் அமைச்சர்கள் அட்வைஸ்!

post image

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் பூதாகரமாகி, த.வெ.க ஆட்சிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. எம்.எல்.ஏ மீது பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொடுத்திருக்கும் ஆபாச மெசேஜ் புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, இன்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது தமிழக அரசு. இந்தச் சூழலில், 'கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை பதவி விலகச் சொல்ல வேண்டும்' என முதல்வருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள் சில சீனியர் அமைச்சர்கள்.

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

அதுகுறித்து நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், "சம்பந்தப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக, அருள் விக்னேஷ் மீது கடந்த ஒரு மாதமாகவே சர்ச்சை வெடித்து சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நவ.23-ம் தேதி மதியம் அந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியுடன் தான் உரையாடியது குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

இந்தச்சூழலில், பெண் அதிகாரியின் புகார், உயர் நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகள், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களால் கடும் அப்செட்டில் இருக்கிறார் முதல்வர் விஜய். அருள் விக்னேஷிடம் முறைப்படி விசாரித்து, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இன்று எம்.எல்.ஏ-வின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரது செல்போனை கைப்பற்றியிருக்கிறார்கள். அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதற்கிடையே, 'ஒரு மக்கள் பிரதிநிதி மீதான குற்றச்சாட்டு ஒட்டுமொத்த அரசின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கிவிடும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவரை விலகச் சொல்ல வேண்டும்' என்று சீனியர் அமைச்சர்கள் சிலர் முதல்வருக்கு அட்வைஸ் அளித்துள்ளனர். அதன்மூலமாக, 'கட்சியினரிடம் ஒழுக்கமும் கண்டிப்பும் உருவாவதோடு, 'யார் தவறு செய்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார்' என்பது உறுதியாகிவிடும்' என்றும் கூறியுள்ளனர். போலீஸ் விசாரணை முடிவுக்குப் பின்னர், அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்றனர்.

அருள் விக்னேஷ் மீதான புகார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, ''யாரையும் பாதுகாக்க முயற்சிக்க வேண்டாம். ஆபாச தாக்குதலுக்கு உள்ளாவது தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, அதைவிட கீழ் பதவியில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை'' என்று கடும் வார்த்தைகளால் எச்சரித்திருக்கிறது நீதிமன்றம். இதெல்லாம் முதல்வருக்கு நெருக்கடியை உருவாக்கியிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

"தவெக MLA அருளைக் காப்பாற்ற முயன்ற முதல்வர் விஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன்

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னே... மேலும் பார்க்க

"கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம்

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளமும... மேலும் பார்க்க

தவெக MLA மீது வழக்கு: ``4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" - ஸ்டாலின் காட்டம்

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி தவெக MLA மீது வழக்கு: "கால தாமதம் செய்யாமல் கைது நடவடிக்கை வேண்டும்" - அன்புமணி

"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ்... மேலும் பார்க்க

'வதந்தி, அய்யோ பாவம், புகார் வந்தால்...' - கள்ளக்குறிச்சி MLAவுக்கு ஆதரவாக ஒலித்த தவெக குரல்கள்!

நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு கலெக்டருக்குத் தொந்தரவு செய்யும் விதத்தில் மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் எம்.எல்... மேலும் பார்க்க