"கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. ...
கள்ளக்குறிச்சி தவெக MLA மீது வழக்கு: "கால தாமதம் செய்யாமல் கைது நடவடிக்கை வேண்டும்" - அன்புமணி
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மைத் தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் புகார் மூலம் இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்தச் சிக்கல் தொடர்பாகத் தெளிவு பிறந்துள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் செல்பேசி மூலம் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவில் முகாம் அலுவலகத்திற்குச் சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிகழ்வு சுமார் இரு மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் இதே நிலைப்பாட்டையே தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று புகார் அளித்ததாக தி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

வழக்கை விசாரித்த நீதியரசரும், இந்த வழக்கில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உள் விசாரணைக் குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பியதுடன், இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால், இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீது கைது உள்ளிட்ட சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












