செய்திகள் :

காட்பாடி: மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை; சொத்துத் தகராறில் சொந்த தம்பியே வெறிச்செயல்?

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு தினகரன் (வயது 25), மயிலழகன் (23) என்று இரு மகன்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தினகரனுக்கு வலது கை துண்டானது. இதனால், ஒரு கையுடன் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் தினகரன்.

இவர்களுக்கு குடும்பச் சொத்தாக 12 ஏக்கர் நிலம் இருந்தது. இதைப் பாகப்பிரிவினை செய்தபோது, மாற்றுத்திறனாளியான தினகரனுக்கு 8 ஏக்கரும், அவரது தம்பி மயிலழகனுக்கு 4 ஏக்கரும் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், பெருமாளிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி பொன்னியம்மாள் பிரிந்து சென்றுவிட்டதாகவும், இளைய மகன் மயிலழகனும் தனியாக வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.

கொலை

இதையடுத்து, மூத்த மகனான கையை இழந்த தினகரன் தந்தை பெருமாள் மற்றும் பாட்டி பச்சையம்மாளுடன் நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஒரு கை இல்லையென்றபோதிலும், டிராக்டர் இயக்குவது, பைக் ஓட்டுவது, வரப்பு வெட்டுவது என எல்லா வேலைகளிலும் தினகரனே ஈடுபாட்டுடன் செய்துவந்திருக்கிறார்.

மேலும், அதே பகுதியில் மாநில நெடுஞ்சாலையையொட்டி தனக்கு இருக்கும் நிலத்தில் புதிதாக 4 கடைகளைக் கட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசமும் நடத்தியிருக்கிறார். புதிய கடைகளுக்குக் காவலாக இருக்க வேண்டும் என்பதற்காக தினகரனின் தந்தை பெருமாளும், பாட்டி பச்சையம்மாளும் கடை அமைந்திருக்கும் பகுதியிலேயே கடந்த இரு தினங்களாகப் படுத்து தூங்கியிருக்கின்றனர். தினகரன் மட்டும் நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்து படுத்து தூங்கினார்.

இன்று காலை கடையில் இருந்து எழுந்து தந்தை பெருமாளும், பாட்டி பச்சையம்மாளும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் தினகரன் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். தினகரனின் பின் மண்டையில் பலத்த வெட்டுக்காயம் இருக்கிறது. இதனால், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தினகரனைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

அவரது சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்ததும், விருதம்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் கொலையாளியைக் கண்டறிய முயன்றனர். அப்போது, கொலை நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்து ஓடிய நாய், சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள தினகரனின் தம்பி மயிலழகன் வீட்டின் முன்பு சென்று நின்றது.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

இதையடுத்து, மயிலழகனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மயிலழகனுக்குக் கொடுக்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தையும் அவர் விற்று செலவழித்துவிட்டதாகவும், அண்ணன் தினகரன் புதிதாகக் கட்டிய 4 கடைகளில் 2 கடைகளைத் தனக்குப் பிரித்து தருமாறு கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் தினகரனுடன் மயிலழகனுக்கு மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவேதான் மயிலழகனுக்கு அவரது அண்ணன் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மயிலழகனின் கூட்டாளியான காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரையும் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது போலீஸ். விசாரணைக்குப் பிறகே, கொலையாளிகள் யார்? என்பது தெரியவரும். அதேசமயம், இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரத்தில் சிக்கிய தங்ககட்டிகள்; தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி! - முழு பின்னணி

ராமநாதபுரம் அருகேயுள்ள முடுக்குத்தரவை ரோட்டில் கடந்த செப்டம்பரில் போதைப்பொருள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த ராமநாதபுரத்தைச் ச... மேலும் பார்க்க

சகோதரி கொலை வழக்கு: தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து குற்றவாளி சகோதரன் தற்கொலை

மும்பை அருகில் உள்ள நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(36). ஆட்டோ டிரைவரான நாகேஷ் தனது மனைவி ஜோத்சனாவிற்கு தனது சகோதரியின் கணவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக சந்தேகப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: நள்ளிரவு வாக்குவாதத்தில் லிவ்இன் பார்ட்னரை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

புனேயில் ஏராளமான சாப்ட்வேர் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்காக அதிக அளவில் வாடகை வீடுகள், லாட்ஜ்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஹிங்ஜேவாடி என்ற இடத்தில் இருக்கும் பி.ஜி.ஹோம் ஒன்றில் தங்கிக்கொண்டு... மேலும் பார்க்க

குமரி: ரயில் பெட்டியில் பெண் படுகொலை; 7.30 மணிநேரம் அதே பெட்டியில் இருந்த கொலையாளி - அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருட்டு : மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி!

தங்க நகை திருட்டு வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலுள்ள சகோதரி வீட... மேலும் பார்க்க

குமரி: இரவு முழுவதும் சித்ரவதை; 72 வயது தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வாட்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 72). சுவாமிதாஸ் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் மயங... மேலும் பார்க்க