செய்திகள் :

கள்ளக்குறிச்சி: ``துணிச்சல்' மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்" - எம்.பி கனிமொழி

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை முடக்குவதற்கு போடப்பட்ட சதித்திட்டம்." என உறுதியாக மறுத்தார்.

அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ``அருள் விக்னேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் பட்டதாரி, அவரே பாவம்... அவர்மீது சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை வைத்து குற்றம்சாட்டமுடியாது. அவரே இல்லை என விளக்கமளித்திருக்கிறார்." எனப் பேசியிருந்தார்.

அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், ``சமூக ஊடகத்தில் யாரோ பரப்பியதை வைத்து எல்லோரும் அவர் மீது குற்றம்சுமத்துகிறார்கள். கனிமொழி இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக இதைத் தொடங்கியிருக்கிறார். வதந்திகளுக்கெல்லாம் பதில சொல்லிக்கொண்டிருக்க முடியாது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி தன் எக்ஸ் பக்கத்தில், ``தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்? ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழி

இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் விஜய் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுகிறார்களா என பார்க்கச் செல்வேன்" - நயினார் நாகேந்திரன் அதிரடி

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், நேற்று அந்த மனு விசாரிக்கப்படாத நிலைய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: 144 தடை உத்தரவு; வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர் - பதற்றத்தில் மதுரை!

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உ... மேலும் பார்க்க

``விஜய்யின் போலி பிம்பங்கள், அவர் MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது" - எடப்பாடி பழனிசாமி

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்ச... மேலும் பார்க்க

Coimbatore Day: அன்று வாழத் தகுதியற்ற இடம்... இன்று `தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' - HBD கோவை

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்பு வரை பேரூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சிற்றூரே கோயம்புத்தூர். கோவன் என்ற பழங்குடித் தலைவன் ஆண்ட இந்த ஊர், கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோயம்புத்தூராக... மேலும் பார்க்க

ஆபாச மெசேஜ்: ``பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்?" - தமிழிசை, அண்ணாமலை காட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் ந... மேலும் பார்க்க

ஆபாச மெசேஜ்: ``மைனாரிட்டி அரசைக் காப்பாற்ற... ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால்.!" - ஸ்டாலின் காட்டம்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செ... மேலும் பார்க்க