செய்திகள் :

`144 தடை' - திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வளைத்த காவல்துறை; நாளைவரை நீடிக்கும் தடை உத்தரவு!

post image

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை முன்னிட்டு, இன்று நடைபெற உள்ள தீபத் திருவிழாவை ஒட்டி அப்பகுதி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகளுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 132 காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 5,618 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நேற்று (23/11/2026) இரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் தடை உத்தரவு, நாளை (25-ஆம் தேதி) காலை 10 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இந்தத் தடை உத்தரவின் காரணமாக, வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் திருப்பரங்குன்றத்திற்குள் நுழையக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்ட எல்லை முழுவதும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் ஓரிடத்தில் அதிகப்படியாகக் கூடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'காங்கிரஸ் MLAக்களுடன் மட்டும் 45 நிமிட ஆலோசனை!- விஜய்யின் எம்.எல்.ஏக்கள் மீட்டிங்கில் என்ன நடந்தது?

தவெக அரசு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் இங்கே. விஜய்சமீபத்தில்தான் தவெக எம்.எல்.ஏக்... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!' - எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

தவெகவின் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் போன்றவை குறித்தும்... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' - தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: Red Zone-ஆக அறிவிக்கப்பட்ட மலைப் பகுதி; குவிக்கப்பட்ட போலீஸ்... விவரம் என்ன?!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய... மேலும் பார்க்க

'முக்கிய தகவல்களைப் பகிர WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!'- மத்திய அரசு அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் அலுவலகங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் 'வாட்ஸ்அப் வெப்' பயன்படுத்துபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூற‌ப்படும் விவகாரத்தில் நாளொரு தகவல் வெளியாகி வருவது குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.உண... மேலும் பார்க்க