செய்திகள் :

'திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!' - எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

post image

தவெகவின் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் போன்றவை குறித்தும் முதல்வர் விஜய் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

விஜய்
விஜய்

முதல்வருடனான இந்த ஆலோசனைக் கூட்டத்யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் லதா, செல்லச்சாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இவர்களிடம் மட்டும் முதல்வர் 20 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

இருவரும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை, வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு போன்றவை குறித்து முதல்வரிடம் விளக்கியிருக்கின்றனர். அதையெல்லாம் கேட்டு முதல்வரும் தனது டைரியில் குறிப்பெழுதியிருக்கிறார். இதன் பின்னர்தான் பொதுவான விஷயங்களை பேசியிருக்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக வழக்கமாக எங்கே தீபம் ஏற்றப்படுமோ அங்கே மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இந்து அமைப்புகள் கோரும் இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என லதா கூறியிருக்கிறார்.

சி.பி.எம் எம்.எல்.ஏக்கள்
சி.பி.எம் எம்.எல்.ஏக்கள்

அதற்கு விஜய், 'உங்க நிலைப்பாடுதான் எங்க நிலைப்பாடும். கவலைப்படாதீங்க' எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பற்றி சொன்ன போதும், 'அந்த விவகாரத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். தவறு நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம்' எனக் கூறியிருக்கிறார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது எனக் கூறியதற்கும், 'எங்கே எந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும் தீவிர நடவடிக்கை எடுப்போம்' எனக் கூறியிருக்கிறார்.

தளி ராமச்சந்திரன் சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி கேட்கையில், 'இன்னும் 3 மாதத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்' என முதல்வர் கூறியிருக்கிறார்.

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' - தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: Red Zone-ஆக அறிவிக்கப்பட்ட மலைப் பகுதி; குவிக்கப்பட்ட போலீஸ்... விவரம் என்ன?!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய... மேலும் பார்க்க

'முக்கிய தகவல்களைப் பகிர WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!'- மத்திய அரசு அறிவுறுத்தல்

பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் அலுவலகங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் 'வாட்ஸ்அப் வெப்' பயன்படுத்துபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூற‌ப்படும் விவகாரத்தில் நாளொரு தகவல் வெளியாகி வருவது குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.உண... மேலும் பார்க்க

`கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா?'- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆட்சிய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றாவிட்டால், தவெக அரசைக் கலைக்க வேண்டும்!" - எச்சரிக்கும் இந்து முன்னணி

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா அல்லது கடந்த காலத்தைப்போல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலை ஏற்பட்டுவிடுமா... என்ற திக் திக் சூழ்நிலை நிலவி வருகிறது... மேலும் பார்க்க