செய்திகள் :

"'ராமாயணா' படத்திற்காக 12 திரைப்படங்களை நான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன்!" - ஏ.ஆர்.ரஹ்மான்

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது, ராமாயணா பார்ட் - 1.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Ramayana - Part 1
Ramayana - Part 1

இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான், 'ராமாயணா' படத்திற்காகத் தான் 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்ததாகப் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் 'ராமாயணா' படத்தின் இசை மற்றும் தீம் மியூசிக் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இதில் இடம்பெற்றுள்ள சில பாடல்களும் இசைக் கோர்ப்புகளும் 12 முதல் 13 வெர்ஷன்கள் வரை உருவாக்கப்பட்டன.

குறிப்பாக, 'ராவண தாண்டவம்' பாடல் மட்டும் 12-13 வெர்ஷன்கள் போடப்பட்டு, இறுதியாக அனைவருக்கும் பிடித்த ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்தப் படத்தின் இசை உருவாக்கப் பயணம் மிகவும் அழகானதாக இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

'ராமாயணா' படத்தின் உலகத்திற்குள்ளேயே முழுமையாக மூழ்கியிருக்க வேண்டும் என்பதற்காக, சுமார் 10 முதல் 12 திரைப்படங்களை நான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன்.

அதில் பல முக்கியமான, பெரிய இயக்குநர்களின் திரைப்படங்களும் அடங்கும். ஆனால், அந்த முடிவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஒரு கதையை நான் உண்மையிலேயே நேசித்து, ரசித்துப் பணியாற்றும்போதுதான் அந்தப் படத்தை ஒப்புக்கொள்வேன்.

அப்படிப்பட்ட படங்கள்தான் என் கலை உணர்வுக்குத் தீனி போடுவதோடு, என் ஒட்டுமொத்தக் குழுவையும் உற்சாகமாக வைத்திருக்கும்" எனப் பேசியிருக்கிறார்.

"சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கவே நான் இருந்தேன்!" - பாதுகாப்பாளர் பகிர்ந்த தகவல்

நடிகரும் பாடிபில்டருமான கேதன் கரண்டே என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயிடம் பாதுகாப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கேதன் கரண்டேசல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பி... மேலும் பார்க்க

Salman Khan: "யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?" - சல்மான் கான் காட்டம்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'மாத்ருபூமி' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Salman Khanஇப்ப... மேலும் பார்க்க

Alia Bhatt:``மிகவும் அவமரியாதையானது" - திருமண வாழ்க்கை குறித்த விமர்சனத்துக்கு ஆலியா பட் பதில்!

பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்... மேலும் பார்க்க

"200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்"- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர். புத... மேலும் பார்க்க

ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் கெர் பகிர்ந்த அனுபவம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ்,... மேலும் பார்க்க

ராமாயணம் : ``சீதை சாய் பல்லவியின் ஆக்‌ஷன் காட்சி; ஆதாரம் இதுதான்" - இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெ... மேலும் பார்க்க