செய்திகள் :

"சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கவே நான் இருந்தேன்!" - பாதுகாப்பாளர் பகிர்ந்த தகவல்

post image

நடிகரும் பாடிபில்டருமான கேதன் கரண்டே என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயிடம் பாதுகாப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

கேதன் கரண்டே
கேதன் கரண்டே

சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பிரத்யேகப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதாக அவர் சமீபத்தில் இந்தியில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். இத்தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் அவர், "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஐஸ்வர்யா ராயின் பாதுகாப்பாளராகப் பணியாற்றினேன். குறிப்பாக, சல்மான் கானிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்காகவே நான் பணியில் அமர்த்தப்பட்டேன்.

ஒருவேளை இந்த விஷயம் சல்மான் கானுக்கும் தெரிந்திருக்கலாம். அப்போது ஐஸ்வர்யா 'குச் நா கஹோ' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து, படப்பிடிப்புத் தளத்தில் விடுவதே என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது.

Salman Khan & Aishwarya Rai
Salman Khan & Aishwarya Rai

ஒருமுறை ஐஸ்வர்யா மேடத்தை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் காரில் ஏறிப் புறப்படத் தயாரானபோது, நேர் எதிரே சல்மான் கான் நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் காரை விட்டு இறங்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், டிரைவர் 'நீங்கள் இறங்க வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, உடனடியாகக் காரை வேறு திசையில் திருப்பி வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Salman Khan: "யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?" - சல்மான் கான் காட்டம்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'மாத்ருபூமி' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Salman Khanஇப்ப... மேலும் பார்க்க

Alia Bhatt:``மிகவும் அவமரியாதையானது" - திருமண வாழ்க்கை குறித்த விமர்சனத்துக்கு ஆலியா பட் பதில்!

பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்... மேலும் பார்க்க

"200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்"- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர். புத... மேலும் பார்க்க

ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் கெர் பகிர்ந்த அனுபவம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ்,... மேலும் பார்க்க

ராமாயணம் : ``சீதை சாய் பல்லவியின் ஆக்‌ஷன் காட்சி; ஆதாரம் இதுதான்" - இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெ... மேலும் பார்க்க

"பதற்றமடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்" - கணவர் விக்கி கெளஷல் பற்றி கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது கணவர் விக்கி கௌஷல் தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்தும், தாய்மை மற்றும் நடிப்பு குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Vicky Kaushal - Katrina Kaif2021-ம்... மேலும் பார்க்க