செய்திகள் :

ஒயிலாட்டக் கலைஞர் 'சங்கமம்' கனகராஜ் மறைவு - ஒயிலாட்டம் ஆடியபடி வழியனுப்பிய நாட்டுப்புறக் கலைஞர்கள்!

post image

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (56). அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், வகுப்பறைப் பாடங்களோடு நின்றுவிடாமல், தமிழர்களின் பாரம்பர்ய நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். 'சங்கமம்' என்ற கலை அமைப்பை நிறுவி, அதன் மூலம் கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகக் கலைப் பயிற்சி அளித்து வந்தார்.

கனகராஜ்
கனகராஜ்

அழிந்து வரும் கிராமியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கில், இதுவரை 120-க்கும் மேற்பட்ட பிரமாண்ட அரங்கேற்றங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கலைஞர்களாக வார்த்தெடுத்த பெருமை இவருக்கு உண்டு. இவரது கலைப் பயணம் கோவையோடு நின்றுவிடாமல், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று நமது மண்ணின் மணத்தை உலகறியச் செய்தவர்.

கனகராஜ் இறுதி ஊர்வலம்
கனகராஜ் இறுதி ஊர்வலம்

இந்நிலையில், நேற்றிரவு பொள்ளாச்சியில் நடைபெறவிருந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தனது மாணவர்களுடன் கனகராஜ் சென்றிருந்தார். அங்கு மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். இந்தச் செய்தி அறிந்த கருமத்தம்பட்டி சுற்றுவட்டார மக்களும் நாட்டுப்புறக் கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கருமத்தம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கனகராஜ் உடலுக்குப் பல்வேறு கலை அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கனகராஜ் இறுதி ஊர்வலம்
கனகராஜ் இறுதி ஊர்வலம்

தொடர்ந்து, அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, தங்களுக்குக் கலை கற்றுக்கொடுத்த ஆசானுக்குப் பிரியாவிடை கொடுக்கும் விதமாக, நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களும், மாணவர்களும் ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து, 'சங்கமம்' திரைப்படப் பாடல் இசைக்கப்பட, கண்ணீருடன் ஒயிலாட்டம் ஆடியபடியே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து, தங்களது அன்பிற்குரிய ஆசானுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். கலைக்காகவே வாழ்ந்து, இறுதி மூச்சு வரை கலைப் பணியிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கனகராஜின் மறைவு, நாட்டுப்புறக் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் கலைஞர்கள் தெரிவித்தனர்.

கனகராஜ் இறுதி ஊர்வலம்
கனகராஜ் இறுதி ஊர்வலம்

கலாமணி மற்றும் பூங்கொடி ஆகியோர் கூறுகையில், "வீட்டில் முடங்கி இருந்த பெண்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்து மன வலிமையை உண்டாக்கி, நாட்டுப்புறக் கலையை வளர்த்தவர். அவர் மூலம் நாங்களும் இந்தக் கலையை வெளி உலகிற்குக் கொண்டு சென்றது பெருமையாக இருந்தாலும், அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாதது" என்றனர். ஒயிலாட்டத்தை மீட்டெடுத்து மக்களிடம் பரவலாக கொண்டு சேர்ந்த கனகராஜின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் ஒயிலாட்டம் ஆடியபடி அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரே ஓவியம்... ₹1,600 கோடிக்கு ஏலம்! வான் கோவின் ஓவியம் படைத்த புதிய சாதனை!

உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் வின்சென்ட் வான் கோ வரைந்த 'Blossoming Chestnut Trees' ஓவியம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Sotheby's ஏல நிறுவனத்தில் 190.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ₹1,6... மேலும் பார்க்க

புதுச்சேரி: அரசு ஆரம்பப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; பாராட்டுகளைப் பெற்ற மாணவர்கள்! | Photo Album

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஅரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஅரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஅரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஅரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஅரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சிஅர... மேலும் பார்க்க

மதுரை ஓவியக் கண்காட்சி: பெண் பாதுகாப்பு முதல் விவசாயம் வரை… ஓவியங்களில் சமூகச் சிந்தனைகள்! | Photos

ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட்சி ஓவியக் கண்காட... மேலும் பார்க்க

"என்னைப் பார்த்து சிரிச்சவங்களே கைதட்ட ஆரம்பிச்சாங்க!" - 3000 மேடை கடந்த கவிதா ஜவஹர் | Photo Clicks

கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்கவிதா ஜவஹர்“என்னைப் பார்த்து சிரிச்சவங்களே கைத... மேலும் பார்க்க