செய்திகள் :

`பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?' - நீதிபதி கேள்வி

post image

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,  "கடந்த 2024ல் தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு  புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய  மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் இந்த புத்தகக் கொள்முதல் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விவரம் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், " இந்த வழக்கு விசாரணையை நீதிபதி லட்சுமி நாராயணன் கண்காணிப்பில் நடத்தலாம். இந்த தவறு நிகழ  முக்கிய காரணம் யார்? பொறுப்பான நபர் ஒருவர் இருப்பாரே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்

அரசுத்தரப்பில், "பொதுநூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி, உயர்மட்ட குழு உறுப்பினர் செயலராகவும் இருந்திருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டது.

ஜெயந்திக்காக அரசுத்தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 நூலகர் காமாட்சி தரப்பில், "அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களை பெருமாள் முருகன் கூட பரிந்துரைத்திருக்கிறார். தேர்வு குழுவை ஒருங்கிணைப்பதே என் பணி." என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி எத்தனை ஆண்டுகளாக நூலகத்தில் பணியாற்றுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

காமாட்சி தரப்பில், "19 ஆண்டுகள்" என பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறிய முடியும்போது உங்களால் முடியாதா? தவறு நிகழ்ந்திருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அதற்கு பொறுப்பானவர்கள் யார்?" என கேள்வி எழுப்பினார்.

காமாட்சி தரப்பில், "அகல்விளக்கு பதிப்பக புத்தகங்கள் பரிந்துரைக் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை உயர் மட்ட குழுவுக்கு அனுப்பியது மட்டுமே நான். எந்த தவறையும்  செய்யவில்லை.

பரிந்துரை செய்யப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்தால் குற்றவாளியை கண்டறியலாம்" என தெரிவிக்கப்பட்டது.

எழுத்தாளர் பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகன்

அரசுத்தரப்பில், "26,000 புத்தகங்கள் பரிந்துரைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஆனால் பரிந்துரை செய்யப்படாத பல புத்தகங்கள் ஒருங்கிணைப்பு குழுவால் இணைக்கப்பட்டு உயர்மட்ட குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பெரியார் அறிவுலக நூலகம் தொடர்பாக மட்டுமே தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பிற நூலகங்களில் இருந்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அகல் விளக்கு பதிப்பகத்தின் மோகனுடைய இன்னொரு வங்கிக் கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமாட்சியே ஒருங்கிணைப்பு குழுவின் தலைமையாக இருந்திருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "காமாட்சி என்பது என்னுடைய மனைவியின் பெயர். இப்போது எனக்கு என்ன பயம் என்றால் சு.வெங்கடேசன் இது குறித்தும் பேசி விடுவாரோ?" என நகைச்சுவையாகக் கூறி சிரித்தார்.

அரசுத்தரப்பில், "புத்தகக் கொள்முதல் தொடர்பாக விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், "உயர்மட்ட குழு இதுவரை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை." என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கோரி தொடரப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பான விவரம் தெரிவிக்கப்பட்டது.  லஞ்ச ஒழிப்பு துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருக்கும் நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டுமென அவரிடம் கோரிக்கை வைக்கிறோம்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

கூடுதல் அரசு வழக்கறிஞர் தரப்பில் நீதிமன்றப் பரிந்துரையை ஏற்று, புத்தகக் கொள்முதல் தொடர்பாக கொள்கையை உருவாக்கி 8 வாரங்களில் வெளியிடுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

காமாட்சி தரப்பில், "இந்த வழக்கில் அப்பாவிகள் சிலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள்,  ``பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள்  தனியே மனுக்களை தாக்கல் செய்து அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை பெறலாம்" என தெரிவித்து, அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன்,  அப்போதைய பொது நூலகத்துறை இயக்குனர் ஜெயந்தி, உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர்த்தி ஆகியோருக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், புத்தகக் கொள்முதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்

திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் இம்முறை மட்டும் தீபமேற்ற அனுமதி - நீதிமன்ற நிபந்தனைகளின் முழு விவரம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ந... மேலும் பார்க்க

`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' - உச்ச நீதிமன்றம் அனுமதி

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வந்தன. இரு த... மேலும் பார்க்க

காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி; பெரும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தள்ளுபடி செய்துள்ளது.மேலும், மூன்றாவது புதிய மனு மீதான விசாரணைய... மேலும் பார்க்க

உங்க பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு... முதலில் என்ன செய்ய வேண்டும்?சட்டம் சொல்வது என்ன? - 17

உங்கள் பெயர்… உங்கள் புகைப்படம்… உங்கள் நண்பர்கள்… ஆனால், அந்தக் கணக்கிலிருந்து வரும் மெசேஜ்களை அனுப்புவது மட்டும் நீங்கள் இல்லை!இணையதளத்தில் அல்லது சமூக வலைத்தளத்தில், உங்கள் பெயரில் யாரோ போலிக் கணக்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. குறிப்பாக, தீபத்தூண் அமைந்துள்ள இடம் ய... மேலும் பார்க்க