`பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?' - நீ...
மும்பை பூங்காவுக்கு வந்த தம்பதியை கம்பால் விரட்டி விரட்டி அடித்த சிறார்கள் - பரவும் அதிர்ச்சி வீடியோ
மும்பை குர்லா பகுதியில் உள்ள போனிக்ஸ் மால் வணிக வளாகம் அருகில் பூங்கா ஒன்று இருக்கிறது. அந்த பூங்காவிற்கு காதல் ஜோடி ஒன்று வந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது அவர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு வந்த மைனர் சிறார்கள் சிலர், அந்த ஜோடியை பார்த்து கிண்டல் செய்து விமர்சனம் செய்தனர்.
இதற்கு அந்த ஜோடி எதிர்ப்பு தெரிவித்தது. உடனே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த ஜோடியை அவர்கள் அடிக்க ஆரம்பித்தனர். முகத்தில் குத்தினர். அதோடு தங்களிடம் இருந்த கம்பால் அடித்தனர். அவர்களிடம் இருந்து தனது ஆண் நண்பரை அவருடன் இருந்த பெண் காப்பாற்ற முயன்றார்.
அந்த நிகழ்வுகளை அப்பெண்ணுடன் இருந்த நபர் தன்னிடம் இருந்த மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றார்.
இதனால் அந்த சிறார்கள் ஆக்ரோஷம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பெரிய கல்லை எடுத்து வந்து தாக்கினர். அதோடு அவர்களை சிறார்கள் விரட்டி சென்று தாக்கினர். அதனை அங்கு நின்று கொண்டிருந்த மற்றவர்கள் தங்களது போனில் வீடியோ எடுத்தனர். அவர்களின் தாக்குதலில் காயம் அடைந்த அந்த ஜோடி இது குறித்து புகார் செய்தனர். இத்தாக்குதலை வீடியோ எடுத்தவர்கள் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அது வேகமாக பரவியது.
இதையடுத்து இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் போலீஸாருக்கு கோரிக்கை விடுத்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பா.ஜ.க பிரமுகர் கிரீத் சோமையா தெரிவித்துள்ளார்.
மேலும் 5 சிறார்களின் பெற்றோருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கிரீத் சோமையா தெரிவித்துள்ளார். 8 பேரை போலீஸார் பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர்



















