செய்திகள் :

பிரார்த்தனை கூடமா, மசூதியா? - தாவூத் குடும்பம் வசித்த கட்டடத்தை அடியோடு இடிக்கும் மும்பை மாநகராட்சி

post image

மும்பையில் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்து வந்த தாவூத் இப்ராகிம் 1986ம் ஆண்டு மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றான். மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் மத்திய அரசால் ஜப்தி செய்யப்பட்டன. அவனுக்கு மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாவூத் தாயார் அமினா பி மற்றும் தாவூத் இப்ராஹிமின் சகோதரி, ஹசீனா பார்கர், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால் அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதோடு அவர்களின் மும்பை சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அரசு தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்களை ஜப்தி செய்து ஏலத்தில் விட்டுவிட்டது.

கட்டிடத்தின் தற்போதைய நிலை

மும்பை பெண்டிபஜார் பகுதியில் உள்ள பாழடைந்த ஹாஜி இஸ்மாயில் ஹபீப் முசாஃபிர்கானா கட்டடத்தில்தான் தாவூத் இப்ராகிம் குடும்பம் இந்தியாவில் இருந்து தப்பிச்செல்வதற்கு முன்பு வரை வசித்து வந்தது.

ஒரு காலத்தில் இக்கட்டிடத்தில் தரை தளத்தில் 32 கடைகளும், மேல் மாடியில் 19 வீடுகளும் இருந்தன. கட்டிடம் மிகவும் பழமையானதாக மாறியதால் அதனை மிகவும் பழுதடைந்த இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. கடந்த 2020ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மேல்பகுதிகளை மாநகராட்சியினர் இடித்தனர். கடந்த சில ஆண்டுகளில் தாவூத் இப்ராஹிம் பயன்படுத்திய முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.

தரைத்தளம் பிரார்த்தனை செய்யும் இடமாக இருந்தது. அதோடு முதல் தளத்தில் 10 அறைகள் மட்டுமே உள்ளன. தரைத்தளத்தில் உள்ள பிரார்த்தனை அறையை சிலர் மசூதி என்று சொல்கின்றனர். ஆனால் அது பிரார்த்தனை அறை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பிரச்னை வக்பு வாரிய தீர்ப்பாயத்தில் இருக்கிறது. இதனை இடிக்க சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்து இருக்கிறது. ஆனால் சாலை விரிவாக்க பணிகளுக்காக அதனை இடிக்கப்போவதாக கடந்த 16 ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் பிரார்த்தனை மண்டபத்தை பயன்படுத்துபவர்கள் மாற்று இடத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிக்காக அதனை அகற்ற முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை இடிப்பதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்டிடம் இன்று அல்லது நாளை இடிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். முன்னாள் எம்.எல்.ஏ.வாரீஸ் பதான் கூறுகையில்,''உச்ச நீதிமன்றம் மற்றும் வக்பு தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிடுவது சட்டவிரோதமானது. அதில் இருப்பது 140 ஆண்டுகள் பழமையான மசூதி. இதை மசூதி என்று அடையாளப்படுத்தியதற்காக புல்டோசரை கொண்டு செல்ல முடியாது. எங்களுக்கு பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். மாநகராட்சியின் முடிவு தன்னிச்சையானது''என்று தெரிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் பட்டேல் கூறுகையில்,''2024-25 வரை செல்லுபடியாகும் உச்சநீதிமன்றம் மற்றும் வக்பு தீர்ப்பாயத்தின் தடை உத்தரவுகள் இருந்தபோதிலும், கட்டாய ஏழு நாள் அல்லது 15 நாள் அறிவிப்பு அவகாசம் கூட கொடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் இடிக்க முடிவு செய்துள்ளது''என்று குற்றம் சாட்டினார். இந்த கட்டிடம் இடிக்கப்படுவதன் மூலம் தாவூத் இப்ராகிமின் கடைசி நினைவுகளும் மும்பையில் இருந்து அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாவூத் இப்ராகிம் வசித்த கட்டடத்தை இடித்துவிட்டு அதில் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட முஸ்லிம் டிரஸ்ட் ஒன்று அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

`ரூ.15 கோடி தொழில் வேண்டாம்' - மனைவி, மகள்களுடன் ஜெயின் மத துறவியாகும் சூரத் தொழிலதிபர்

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் திடீரென ஜெயின் மத சன்னியாசிகளாக மாறிவிடுவதுண்டு. சில நேரங்களில் சிறுமிகள் கூட ஜெயின் மத துறவியாகிவிடுவதுண்டு. புதிதாக சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ... மேலும் பார்க்க

15 ஆண்டுக்கால காத்திருப்பு... ஒரே லாட்டரியில் ரூ.12 கோடி - பஞ்சாப் விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

தினமும் உழைப்பு... விவசாயம்... அவ்வப்போது ஒரு லாட்டரி சீட்டு என வாழ்க்கையை நகர்த்திவந்த விவசாயிக்கு, ஒரே நாளில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிவந்த அவரது காத்திருப்புக்... மேலும் பார்க்க

மும்பை: மனைவியை அமர வைத்து எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் மும்பை வந்துள்ளார். இளவரசர் வில்லியம், வருடாந்திர சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தன் மனைவியுடன் நேற்று மும்பை வந்தார். ந... மேலும் பார்க்க

லாரான்ஸ் கேங் அச்சுறுத்தல்; கமாண்டோ உதவியுடன் பலப்படுத்தப்பட்ட அமிதாப், சல்மான் பாதுகாப்பு!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் பி... மேலும் பார்க்க

பைக்கில் சென்று சிங்கத்தை விரட்டிய வனத்துறை ஊழியர்கள் - குஜராத் வன விலங்குகள் சரணாலய வீடியோ வைரல்!

குஜராத் மாநிலம் அம்பார்டி மாவட்டத்தில் தாரி கிர் கிழக்கு பிரிவில் சிங்கம் சரணாலயம் ஒன்று இருக்கிறது. இங்கு பார்வையாளர்கள் மூடப்பட்ட வாகனங்களில் சென்று சிங்கங்களை நேரில் பார்வையிட முடியும். இந்த சிங்கம... மேலும் பார்க்க