செய்திகள் :

சோனியா புத்தக விழா: 'காங்கிரஸ் அழைப்பை ஸ்டாலின் நிராகரித்தாரா?' - ஆர்.எஸ்.பாரதி பதில்

post image

வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"விலைவாசி உயர்வு பற்றி ஆட்சியாளர்களுக்கு தெரிய நியாயமில்லை. ஏனென்றால், அவர்கள் அரண்மனை வாழ்க்கை நடத்துகிறார்கள்; பாமர மக்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால், வாக்களித்த பாமர மக்கள்தான் நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடே திவாலாகும் நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அனைத்துத் தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்குச் சென்று கொண்டிருக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது. இன்று காலை விசாரித்தபோது சின்ன வெங்காயம் கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு

அரசின் அலட்சியப் போக்கால்தான் இது போன்ற விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, அரிசி விலை மூட்டைக்குக் கிட்டத்தட்ட 1,000 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. பெற்ற குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்கும்போது, 'நான் போய் விஜய்யைப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறும் அளவிற்குப் பாமர மக்கள் இருக்கிறார்கள். இத்தகைய சூழல் இருப்பதால்தான் இது போன்ற நிகழ்வுகளெல்லாம் நடக்கின்றன. இதைப் பற்றியும் அரசு கவலைப்படாமல் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்

கேள்வி: சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளதே?

பதில்: அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் எங்களுடைய விருப்பம். அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

கேள்வி: ஆனால், அழைப்பு வந்ததா சார்?

பதில்: அது குறித்துத் தெரியவில்லை; விசாரித்துத்தான் சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து எங்களுக்கு அழைப்பு வந்திருக்கலாம். ஏனெனில், சோனியா காந்தியைப் பொறுத்தவரையில் 'தளபதி' மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நாங்களும் அவரை மதிக்கிறோம். எனவே, எங்கள் மரியாதை என்பது வேறு; நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது வேறு. எங்களுடைய வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோம். இது ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

கேள்வி: மேகதாது பிரச்னை மற்றும் முதல்வரின் டெல்லி பயணம் குறித்து...

பதில்: டெல்லிக்குச் சென்றவர் மேகதாது பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. இன்று அதுதான் எல்லோருடைய பேச்சாகவும் இருக்கிறது. கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் மிகவும் தைரியமாகப் பேசுகிறார். எந்தத் தைரியத்தில் அப்படிப் பேசுகிறார் என்றால், இங்கே ஒரு அரசாங்கமே இல்லை என்ற எண்ணத்தில்தான். ஆளில்லாத ரயில்வே கேட்டைக் கடக்க முயன்று விபத்தில் சிக்குவது போன்ற பரிதாப நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. டெல்லிக்குச் செல்கிறார், காங்கிரஸ் தலைவர்களைப் பார்க்கிறார், ராகுல் காந்தியைச் சந்திக்கிறார். ஆனால், மேகதாது பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.

கேள்வி: மாணிக்கம் தாகூர் குறித்து...

பதில்: மாணிக்கம் தாகூர், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கொள்கை பரப்புச் செயலாளராக ஆகிவிட்டார்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா - இந்த மூன்று பவர்ஃபுல்லான உலக நாடுகளின் தலைவர்களும் நாளை ஓர் அறையில் கூடுகிறார்கள். இந்த மூன்று உலக நாடுகளின் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் சந்தித்துக்கொள்ளப் போவது இத... மேலும் பார்க்க

'சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன், ஆனால் எனக்கு அழைப்பிதழ்..!'- ஸ்டாலின் கூறியதென்ன?

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். மேகதாது விவகாரத்தில் நீங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் முதல்வர் எதுவும் தெரிவிக்காமல்... மேலும் பார்க்க

காங்கிரஸை வீழ்த்த ஒன்றிணைந்த தலைவர்களும், அதிகாரப் போட்டியால் சிதைந்த ஜனதா கட்சியும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சோத்துப்பாறை:அரசாணை வராமல் திறக்கப்பட்ட பாசன நீர்; ரீல்ஸ் போட்டு அத்துமீறிய தவெகவினர்- என்ன நடந்தது?

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தோத்துப்பாறை அணையில் அரசாணை இல்லாமல் தவெக நிர்வாகிகள் நீரை திறந்து விட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறைய... மேலும் பார்க்க

``தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" - திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,``குதிரை பேரத்தில் (Horse-trading) ஈட... மேலும் பார்க்க

``தவெக-வின் பொறுப்பின்மை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" - அண்ணாமலை காட்டம்!

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவி காலியாகி 4 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்தப் பதவிக்கான நியமனம் நடக்கவில்லை என வீ தி லீடர்ஸ் அமைப்பி... மேலும் பார்க்க