சோனியா புத்தக விழா: 'காங்கிரஸ் அழைப்பை ஸ்டாலின் நிராகரித்தாரா?' - ஆர்.எஸ்.பாரதி ...
'சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன், ஆனால் எனக்கு அழைப்பிதழ்..!'- ஸ்டாலின் கூறியதென்ன?
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.
மேகதாது விவகாரத்தில் நீங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் முதல்வர் எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், " அவர் எப்போது பேசியிருக்கிறார். நீங்கள் தான் அவரை கேட்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து சோனியா சுயசரிதை புத்தகம் வெளியீட்டிற்கு வாழ்த்து சொன்னீர்களா? உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு, " சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன். கடிதமும் எழுதி இருக்கிறேன்.
எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. போனில் தொடர்பு கொண்டு எனது உதவியாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவருக்கு நான் வாழ்த்து அனுப்பி இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














