செய்திகள் :

சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அக்வான் புயல்? IMD அப்டேட்!

post image

தற்போது அக்வான் புயல் எங்கு மையம் கொண்டுள்ளது என்ற அப்டேட்டைத் தற்போது வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.

"தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ தீவிரப் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

இது இன்று (நவம்பர் 18, 2026) காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தப் புயல்

சென்னைக்குக் கிழக்கே சுமார் 570 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்குத் தெற்கு-தென்கிழக்கே 580 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்குத் தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

மேலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 660 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்குத் தெற்கே 710 கி.மீ தொலைவிலும், பூரிக்குத் தெற்கே 770 கி.மீ தொலைவிலும் இது அமைந்துள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ம் தேதி நண்பகல் வாக்கில் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

வடக்கு ஆந்திரா, ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில், நர்சாபூர் மற்றும் பூரி இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

Winter: பச்சை புல்வெளிகளில் வெள்ளை முத்துக்கள்! ஊட்டியில் தொடங்கியது உறைபனி சீசன் | Photo Album

ஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில் உறைபனிஊட்டியில... மேலும் பார்க்க

அக்வான் புயல்: 'சென்னைக்கு கிழக்கே மையம்' - நாளை தீவிர புயலாக மாறுகிறது; எப்போது கரையைக் கடக்கிறது?

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அக்வான் புயல் குறித்த இந்திய வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..."தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அக்... மேலும் பார்க்க

'அக்வான்' புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: எங்கெல்லாம் மழை? - வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித... மேலும் பார்க்க

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; நாளை புயலுக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?

இந்திய வானிலை மையம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த தற்போதைய அப்டேட்டைக் கொடுத்துள்ளது.இந்திய வானிலை மையம் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல்; தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, படிப்படியாக வலுவடைந்து புயலாக வரும் 16ஆம் மாலை மாறும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

தீவிர புயலாக மாறிய முரசு; தமிழகத்திற்குப் பாதிப்பு உண்டா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க