ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் க...
'அக்வான்' புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: எங்கெல்லாம் மழை? - வானிலை மையம் தகவல்!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ‘அக்வான்’ புயலாகவும் உருவாகிறது. இந்தப் புயல் வரும் 18-ம் தேதி தீவிரப் புயலாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கும் என்பது கரையை நெருங்கும்போது துல்லியமாகக் கணிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 17, 18 மற்றும் 19-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் முதல் மாலத்தீவின் வடக்குப் பகுதி வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையால், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















