செய்திகள் :

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; நாளை புயலுக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?

post image

இந்திய வானிலை மையம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த தற்போதைய அப்டேட்டைக் கொடுத்துள்ளது.

இந்திய வானிலை மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான 'ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி', வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இன்று (நவம்பர் 15, 2026) காலை 5:30 மணி நிலவரப்படி, இது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.

இந்திய வானிலை மையம் பதிவு
இந்திய வானிலை மையம் பதிவு

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,

> ஸ்ரீ விஜயபுரத்திற்கு (போர்ட் பிளேர் - அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 700 கி.மீ தொலைவிலும்,

> சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 860 கி.மீ தொலைவிலும்,

> விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 1040 கி.மீ தொலைவிலும்,

> கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கு-தென்கிழக்கே 1160 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது.

புயல் எப்போது?

மேலும், நவம்பர் 16-ம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் 'புயலாகவும்',

நவம்பர் 17, 2026 அன்று மத்திய மேற்கு வங்கக்கடலில் 'தீவிரப் புயலாகவும்' வலுப்பெறக்கூடும்.

இது வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை ஆகும்.

தமிழ்நாடு பாதிக்கப்படுமா? சித்தரிப்புப் படம்
தமிழ்நாடு பாதிக்கப்படுமா? சித்தரிப்புப் படம்

தமிழ்நாடு...

அறிக்கையின்படி, தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் 'புயலாக' மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரியும் அமைந்திருக்கிறது.

அடுத்ததாக, மத்திய மேற்கு வங்கக்கடலில் 'தீவிரப் புயலாக' மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே சென்னையும் வட கடலோர மாவட்டங்களும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல்; தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, படிப்படியாக வலுவடைந்து புயலாக வரும் 16ஆம் மாலை மாறும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

தீவிர புயலாக மாறிய முரசு; தமிழகத்திற்குப் பாதிப்பு உண்டா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

முரசு புயல்: எப்போது கரையைக் கடக்கிறது? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Latest Update

முரசு புயலின் லேட்டஸ்ட் அப்டேட்டை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையத்தின் எக்ஸ் தளப் பதிவின் படி, "மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு எனும் கடும... மேலும் பார்க்க

Rain Alert: முரசு புயல்; ``நாளை மாலைவரை கனமழைப் பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும... மேலும் பார்க்க

Rain Alert: 'உருவாகும் முரசு புயல்'- தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ ... மேலும் பார்க்க

Rain Alert: வருகிற 2-ம் தேதி வங்கக் கடலில் புயல்? தமிழ்நாட்டில் எங்கெங்கே மழை? வானிலை மைய அப்டேட்!

இந்திய வானிலை மையம் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது.“தெற்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக... மேலும் பார்க்க