செய்திகள் :

"ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிகப்பு" - காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்

post image

என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங். இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகப் பணியாற்றினார்.

சமீபத்தில், இவர் மீது எழுந்த புகார்களால் (சீன உளவாளியுடன் தொடர்பு, நிறுவனத்தில் பணியாற்றியவர்களுடன் உறவு) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார் ஜென்சன் ஹுவாங்.

இவருக்குப் பதிலாக, என்விடியா நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக கோலெட் கிரெஸ் கடந்த நவம்பர் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இப்போது அந்த நிறுவனம் தகுந்த நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடி வருகிறது.

ஜென்சன் ஹுவாங்
ஜென்சன் ஹுவாங்

எலான்‌ மஸ்க் பதிவு

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், "என்விடியாவின் விநியோகச் சங்கிலியை ஜென்சன் மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

அவற்றில் பல ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமானவை அல்ல; ஜென்சனுடனான வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தவை.

ஜென்சன் இல்லையென்றால், அவற்றில் சில முக்கியமான ஒப்பந்தங்களாவது கைநழுவிப் போக வாய்ப்புள்ளது.

ஒரு நொடி கூட...

கம்ப்யூட் விநியோகம் குறித்து ஜென்சன் என்னிடம் வாக்குறுதி அளித்தாலோ, அல்லது உதிரிபாகங்களை விரைவாக அனுப்புமாறு நான் கேட்டாலோ, அவர் எப்போதுமே சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.

நாங்கள் பின்னர்தான் ஒரு கட்டத்தில் அதற்கான கொள்முதல் ஆர்டரை உருவாக்குவோம்.

ஆனால், இடையில் அது நடக்காமல் போய்விடுமோ என்று ஒரு நொடிகூட நான் சந்தேகப்பட்டதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

அவுட்லுக், டீம்ஸ் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா? Microsoft புதிய அப்டேட்!

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனர்களின் சேவைகளைப் பாதித்த மைக்ரோசாப்ட் 365 தொழில்நுட்பக் கோளாறு தற்போது படிப்படியாகச் சீராகி வருகிறது.இருந்தாலும், நவம்பர் 12-ம் தேதி இரவு சுமார் 11:30 மணிக்குத் தொடங்... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்களுக்கு விடை கிடைக்குமா? AI மருத்துவத்தின் யதார்த்தம்!

இன்னும் ஒரு பத்தாண்டில் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்கள் ஆகியவை வரலாறாகிவிடும் என்ற நம்பிக்கையை முன்வைக்கிறார் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி. செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

Jio: ரூ.15-க்கு 24 மணி நேர அன்லிமிடெட் 5G டேட்டா! - அசத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜியோ!

இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.15-க்கு 24 மணி நேரம் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பொதுவாக கூடுதல் டேட்டா ... மேலும் பார்க்க

தொழில்நுட்ப உலகில் மீண்டும் Layoff: 1,271 ஊழியர்களைப் பாதிக்கும் Canva-வின் அதிரடி மாற்றம்!

பிரபல ஆன்லைன் வடிவமைப்புத் தளமான Canva, தனது பணியமைப்பில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் 1,271 ஊழியர்கள்... நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் சுமார் 22 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனத... மேலும் பார்க்க

வானிலிருந்து விழும் 1.5 டன் விண்கலம்: இந்தியாவுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

சுமார் 1.5 டன் எடை கொண்ட நாசாவின் விண்வெளித் தொலைநோக்கி ஒன்று, தனது 22 ஆண்டுக்கால பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்புகிறது. கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழையவிருக்கும் இந்த வ... மேலும் பார்க்க

இரவிலும் சூரிய ஒளி: இந்திய நிறுவனத்துடன் அமெரிக்க ஸ்டார்ட்அப் ஒப்பந்தம் - வரவேற்பும் கவலையும்!

இரவு நேரத்திலும் சூரிய ஒளியைப் பெற முடியுமா? அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த Reflect Orbital நிறுவனம், விண்வெளியில் பெரிய பிரதிபலிப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை அனுப்பி, சூரிய ... மேலும் பார்க்க