செய்திகள் :

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

post image

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஜெம் வீரமணியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் காவல்துறையின் சோதனை குறித்து காட்டமாகப் பேசியிருந்தார். சோதனை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ''காலை 9 மணிக்கே காவல்துறையினர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஜேசிபியெல்லாம் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனாலும், எங்களின் தரப்பில் காவல்துறையின் சோதனைக்கு எந்தத் தடையும் சொல்லவே இல்லை.

வீட்டில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்பதால் வீரமணியின் மனைவி சோதனையை போனில் படம்பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காவல்துறையினர் வீரமணியின் மனைவியைப் பலவந்தமாக அறையில் அடைத்து வைத்து வீட்டைச் சுற்றி தோண்டி பார்த்திருக்கின்றனர். வீரமணியின் மனைவி கையில் அடிபட்டிருக்கிறது. அவருக்கு வயது 72. அவரின் உயிருக்கு ஆபத்து என்றால் என்ன செய்வது? இவ்வளவு நேரம் ஆய்வு செய்துவிட்டு எதுவும் கிடைக்கவில்லையென போலீஸே கைப்பட எழுதி கொடுத்திருக்கிறது.

வழக்கறிஞர்
வழக்கறிஞர்

நீச்சல் குளத்தின் அருகே தோண்டி சேதப்படுத்தி விட்டனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்'' என்றார்.

காவல்துறை சோதனையின்போது வழக்கறிஞரை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பூபலான். வழக்கறிஞரான இவர் த.வெ.க-வின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா. கடந்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து க... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: Instagram Influencer-ஆன இளம்பெண் கைது செய்யப்பட காரணம் என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தக் கொள்ளைச் ... மேலும் பார்க்க

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' - புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அரசாயி மலையாளி அம்மன் திருக்கோயிலில், தென்கிழக்குப் பகுதியில் புதிதாக கழிப்பிடம் (கழிவறை) கட்டப்பட்டுள்ளது. இந்ந... மேலும் பார்க்க

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்... மேலும் பார்க்க

``செஞ்சி சிறுமி காணாமல்போய் 35 நாள்கள் கடந்துவிட்டன; கேக் ஊட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர்"- கனிமொழி

செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஒரு மாதம் ஆகியும் சிறுமி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் திமுக... மேலும் பார்க்க