செய்திகள் :

ஆபாச மெசேஜ்: "தவெக எம்எல்ஏ மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அரசு ஊழியர் சங்கம்

post image

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் செல்வராணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் வகையில், நவம்பர் 16 முதல் 27 வரை திருச்சி ,திருநெல்வேலி, திருப்பூர், சேலம், நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட 11 முக்கிய நகரங்களில் முதல் கட்ட போராட்டங்கள் நடைபெற உள்ளது.

முக்கியமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6.5 லட்சம் பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழிய முறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள் என அனைத்து துறை ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.

selvarani

இதைத்தவிர, தமிழ்நாடு அரசு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், தொடர்ந்து காலதாமதம் செய்தால் ஒரு லட்சம் அரசு ஊழியர்களைத் திரட்டி டிசம்பர் 4 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

அரசு ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக மட்டுமே தொடர்ந்து கட்சி சார்பற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் த.வெ.க எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களில் ஏறத்தாழ 55 சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர். உச்ச அதிகாரம் படைத்த பெண் மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி துணைக் குழு இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள... மேலும் பார்க்க

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பூபலான். வழக்கறிஞரான இவர் த.வெ.க-வின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா. கடந்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து க... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: Instagram Influencer-ஆன இளம்பெண் கைது செய்யப்பட காரணம் என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தக் கொள்ளைச் ... மேலும் பார்க்க

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' - புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அரசாயி மலையாளி அம்மன் திருக்கோயிலில், தென்கிழக்குப் பகுதியில் புதிதாக கழிப்பிடம் (கழிவறை) கட்டப்பட்டுள்ளது. இந்ந... மேலும் பார்க்க

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்... மேலும் பார்க்க