செய்திகள் :

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' - புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

post image

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அரசாயி மலையாளி அம்மன் திருக்கோயிலில், தென்கிழக்குப் பகுதியில் புதிதாக கழிப்பிடம் (கழிவறை) கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின்படி தென்கிழக்குத் திசையானது அக்னி மூலையாகக் கருதப்படுகிறது. அம்மன் அக்னி சக்தியுடன் தொடர்புடைய தெய்வமாகப் போற்றப்படும் நிலையில், ஆலயத்தின் அக்னி மூலையில் கழிப்பிடம் அமைத்திருப்பது வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது என்று இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கம் நிறுவனர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி குற்றம்சாட்டியுள்ளார்.

makeswari vaiyapuri

இதுபற்றி, நம்மிடம் பேசிய அவர், "அருள்மிகு அரசாயி அம்மன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மனின் வலதுபுறத்தில், அதாவது தென்கிழக்குப் பகுதியில், புதிதாக இந்தக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் புனிதத்தன்மை, ஆகம மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இத்தகைய கட்டுமானம் இப்படி மேற்கொள்ளப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பொதுவாக, வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளின்படி கழிப்பறை அமைப்பதற்கு வடமேற்குப் பகுதி ஏற்ற இடமாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட திருக்கோயிலின் ஆகம மரபு, ஸ்தல அமைப்பு மற்றும் கட்டட விதிமுறைகளின் அடிப்படையில் உரிய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்வது அவசியமாகும்.

இவ்வாறு அம்மன் சந்நிதிக்கு அருகில், தென்கிழக்கு அக்னி மூலையில் கழிப்பிடம் அமைத்திருப்பது ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பாதிப்பதுடன், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் மனதிலும் வேதனையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையும், திருக்கோயில் நிர்வாகமும் உடனடியாகக் கவனம் செலுத்தி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் இடம் மற்றும் கட்டுமானம் குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, சம்பந்தப்பட்ட திருக்கோயிலின் ஆகம மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளின்படி உரிய வல்லுநர்களின் கருத்தைப் பெற வேண்டும். கட்டுமானத்திற்கான நிர்வாக அனுமதி, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் தொடர்புடைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

toilet

அதனைத்தொடர்ந்து, விதிமீறல் அல்லது முறையற்ற கட்டுமானம் உறுதி செய்யப்பட்டால், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அதனை அகற்றவோ அல்லது தகுந்த மாற்று நடவடிக்கை எடுக்கவோ வேண்டும். அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மையையும், ஆகம மரபுகளையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பது அறநிலையத்துறையின் முக்கியப் பொறுப்பாகும்.

எனவே, இவ்விவகாரத்தில் காலதாமதமின்றி உரிய விசாரணை நடத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள... மேலும் பார்க்க

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பூபலான். வழக்கறிஞரான இவர் த.வெ.க-வின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா. கடந்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து க... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: Instagram Influencer-ஆன இளம்பெண் கைது செய்யப்பட காரணம் என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தக் கொள்ளைச் ... மேலும் பார்க்க

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்... மேலும் பார்க்க

``செஞ்சி சிறுமி காணாமல்போய் 35 நாள்கள் கடந்துவிட்டன; கேக் ஊட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர்"- கனிமொழி

செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் ஒரு மாதம் ஆகியும் சிறுமி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் திமுக... மேலும் பார்க்க