கந்த சஷ்டி விரதம் : தமிழ் வளர்த்த அடியார்களுக்கு அருளிய முருகன்... 'திருச்செந்தூ...
வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல்; தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, படிப்படியாக வலுவடைந்து புயலாக வரும் 16ஆம் மாலை மாறும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் நிலவிய மேல் வளிமண்டல புயல் சுழற்சியின் தாக்கத்தால், இந்திய நேரப்படி காலை 05.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி, நவம்பர் 13, 2026, இந்திய நேரப்படி காலை 08.30 மணி வரையிலும் அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மாறி, நவம்பர் 15, 2026 காலை வாக்கில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் வலுப்பெற்று ஒரு புயலாக மாற வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ.16ம் தேதி புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஈரான் நாடு பரிந்துரைத்துள்ள 'அக்வான்' என்ற பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்வான் என்றால், அசுரன் அல்லது அரக்கன் என்பது பொருள்.
தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் மழைத்தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " இன்று (நவ.16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்" என்று தெரிவித்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
















