செய்திகள் :

"Online டெண்டர் வேண்டாம் என்பது சட்டவிரோதம்"- ஊழியர் சங்கம்; என்ன நடக்கிறது ஊரக வளர்ச்சித் துறையில்?

post image

அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில் (மின்) மட்டுமே டெண்டர் விட வேண்டுமென 2023 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. ஆனால் அதை மதிக்காமல் தற்போது மேனுவலாக ஓபன் டெண்டர் விடச் சொல்லி அதிகாரிகள் வாய் மொழி உத்தரவிட்டிருக்கிறார்களாம்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் இது தொடர்பாக துறை உயரதிகாரிகளுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசு வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.

என்ன விவகாரம் என விரிவாகப் பார்க்கலாம்.

மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு டெண்டர் விட்டு டெண்டரில் குறைவான தொகையில் அந்த வேலையைச் செய்து தரச் சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் தருவதுதான் வழக்கமான நடைமுறை.

எந்த கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பெரும்பாலும் இந்தக் காண்ட்ராக்டுகள் கிடைத்து வந்ததுதான் கடந்த காலங்களில் நடந்து வந்தது.

உயரதிகாரிகளிடம் புகார்
உயரதிகாரிகளிடம் புகார்

கட்சிக்காரர்கள் சம்பாதித்து விட்டுப் போகட்டுமென ஆட்சித் தலைமையும் இதை அனுமதிக்கும்.

ஆனால் அரசியல் பின்புலம் இல்லாத சில நிறுவனங்கள் இந்த டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் ஒரு கட்டத்தில் டெண்டர் நடைமுறையை ஆன்லைனுக்கு வேறு வழியில்லாமல் மாற்றியது கடந்த திமுக அரசு.

இதன்படி 2023 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அனைத்துத் திட்டப் பணிகளையும் மின் ஒப்பந்த முறை வழியாக மட்டுமே செயல்படுத்த வேண்டுமென்கிறது தமிழக அரசின் அரசாணை.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அமைச்சராக இருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரிடமிருந்து அதிகாரிகளுக்கு ஒரு செய்தி சென்றிருக்கிறது. அதாவது ரூபாய் பத்து லட்சம் வரையிலான திட்டப் பணிகளை திறந்த வெளி ஒப்பந்த முறையில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டதாம்..

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இந்த உத்தரவு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிச் சட்டம் 1998 மற்றும் 2000க்கு எதிரானது என்கிறார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சீ. காந்திமதிநாதன்.

''அரசு உத்தரவுகள் ஒண்ணுக்கொண்ணு முரணா இருந்தா செயல்படுத்தறப்ப பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும். மின் டெண்டர் மட்டும்தான் விடணும்னு ஏற்கனவே ஆர்டர் இருக்குறப்ப இப்ப 10 லட்சத்துக்குக் குறைவான தொகைன்னா திறந்த வெளி டெண்டர் விடலாம்னு சொன்னா எப்படி?

சில தினங்களுக்கு முன்னாடி நடந்த கானொளிக் கூட்டத்தில் இந்தத் திறந்த முறை டெண்டரை அமல்படுத்தச் சொல்லி  வாய் மொழியாகவே உத்தரவிட்டிருக்காங்க. அதை எழுத்து பூர்வமா தாங்கனு கேட்டிருக்கோம்’' என்கிறார் இவர்.

என். ஆனந்த்
என். ஆனந்த்

தலைமைச் செயலக வட்டாரத்தில் சிலரிடம் இந்த விவகாரம்  தொடர்பாகப் பேச்சுக் கொடுத்தோம்.

‘’ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்களுக்குக் காலங்காலமா கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேலைதான். திமுக ஆட்சியில வேற வழியில்லாம மின் டெண்டர் முறையைப் புகுத்தினாங்க. இந்த அரசு வந்ததும் யாரையும் தவறாச் சம்பாதிக்க விட மாட்டேனு முதல்வர் சொன்னார். ஆனா அவருடைய கட்சிக்காரங்க எத்தனை நாளுக்குச் சும்மா இருப்பாங்க? அவங்க அழுத்தம்தான் இந்த மாதிரி ஒரு உத்தரவுக்குக் காரணம்.

இது அமைச்சர்கள் வரையில் முடிவான உத்தரவா அல்லது தலைமை வரைக்கும் தெரிஞ்சுதான் நடக்குதான்னு தெரியல. ஆனா இந்த ஒரு துறையில் இதை அனுமதிச்சா இதையே உதாரணாமா வச்சு எல்லா துறையிலும் கொண்டு வந்துடுவாங்க. பிறகு பழைய கதையே திரும்பிடும்'' என்கிறார்கள்.

விஜய்
விஜய்

திமுக அரசு செய்த முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் எனத் தொடர்ந்து பேசி வருகிற அமைச்சர்கள் இந்தத் திறந்த வெளி டெண்டர் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? துறையின் அமைச்சர் ஆனந்த் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் நகர்வு? ஹபீஸ் சயீத், மசூத் அசார் ரகசிய இடங்களுக்கு மாற்றம்

'இந்தியா தாக்குதல் நடத்தலாம்' என்கிற பயத்தால், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள பலத்த பாதுகாப்பு கொண்ட ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள... மேலும் பார்க்க

"மசூதிகள் இடிக்கப்பட்ட இடங்களுக்கு யாதவ் சென்றிருக்கிறாரா?" - உபியில் பிரசாரத்தைத் தொடங்கிய ஒவைசி

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால் சமாஜ்வ... மேலும் பார்க்க

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் உடல்கள் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் 8 மணி நேரம் சோதனை செய்து முடித்திருக்கின்றனர்.ஜெம் ... மேலும் பார்க்க

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள... மேலும் பார்க்க

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பூபலான். வழக்கறிஞரான இவர் த.வெ.க-வின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா. கடந்த... மேலும் பார்க்க

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து க... மேலும் பார்க்க