செய்திகள் :

அக்வான் புயல்: 'சென்னைக்கு கிழக்கே மையம்' - நாளை தீவிர புயலாக மாறுகிறது; எப்போது கரையைக் கடக்கிறது?

post image

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அக்வான் புயல் குறித்த இந்திய வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...

"தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அக்வான்' புயல், நவம்பர் 16-ம் தேதி இரவு 11:30 மணி நிலவரப்படி பெரிய அளவில் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்தது.

சென்னைக்கு கிழக்கே...

இது சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும், திருகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 790 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

எப்போது கரையைக் கடக்கிறது?

நவம்பர் 17-ம் தேதி மாலைக்குள் இது தீவிரப் புயலாகவும், நவம்பர் 19-ம் தேதி காலை வாக்கில் அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

நவம்பர் 20-ம் தேதி நண்பகல் வாக்கில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள நெல்லூர் மற்றும் துனி இடையே மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுடன் இது கரையைக் கடக்கக்கூடும்"

'அக்வான்' புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: எங்கெல்லாம் மழை? - வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித... மேலும் பார்க்க

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; நாளை புயலுக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?

இந்திய வானிலை மையம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த தற்போதைய அப்டேட்டைக் கொடுத்துள்ளது.இந்திய வானிலை மையம் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல்; தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, படிப்படியாக வலுவடைந்து புயலாக வரும் 16ஆம் மாலை மாறும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

தீவிர புயலாக மாறிய முரசு; தமிழகத்திற்குப் பாதிப்பு உண்டா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

முரசு புயல்: எப்போது கரையைக் கடக்கிறது? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Latest Update

முரசு புயலின் லேட்டஸ்ட் அப்டேட்டை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையத்தின் எக்ஸ் தளப் பதிவின் படி, "மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு எனும் கடும... மேலும் பார்க்க

Rain Alert: முரசு புயல்; ``நாளை மாலைவரை கனமழைப் பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும... மேலும் பார்க்க