செய்திகள் :

'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல்

post image

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்​கப்​பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்​தியா முழு​வதும் விற்​பனைக்கு வந்​தது.

இதன் அதி​கார​பூர்வ வெளியீட்டு விழா டெல்​லி​யில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்றிருக்கின்றனர்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, " குடும்பத்தை பற்றி வெளியே பேசுபவை உண்மையற்றவை. எனது உணர்வுகளை இந்த நூலின் வாயிலாகவே வெளிக்கொணர்ந்துள்ளேன். நினைவில் இருந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். டைரி எழுதாமல் விட்டது நான் செய்த பிழை. இந்தியப் பெண் என்ற உரிமையைப் பெற போராடினேன். இந்த சுயசரிதை நூலுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது.

என்னுடைய கதையை வெளியில் சொல்ல வேண்டும், புத்தகமாக எழுத வேண்டும் என நண்பர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ராகுல், பிரியங்கா மற்றும் என்னுடைய நண்பரான மஞ்சுலேகா ஆகியோர் கேட்டுக் கொண்டே இருந்ததால் புத்தகம் எழுதலாம் என முடிவு செய்தேன். ஆரம்பத்தில் எழுதுவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. பின்னர், ஒரு அணை உடைந்ததை போல என் வாழ்வின் சம்பவங்கள் மளமளவென எழுத்தாக வந்தன.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா
சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

என்னுடைய இளம் வயது சம்பவங்களை மிக எளிதாக எழுதிவிட்டேன். ஆனால், என்னுடைய அத்தை இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை. அந்தத் தருணங்களை நினைவுக் கூறுவது மிகக் கடினமாக இருந்தது. நாம் ஒவ்வொரு வார்த்தையை தவறாக பேசும் போதும்...சில செயல்களை தவறாக செய்யும் போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருப்போம். நான் இங்குடையவராக ஏற்கப்பட்டுக் கொள்ள நிறைய போராடினேன். இதை ஒவ்வொரு இந்தியப் பெண்ணுடனும் பொருத்திப் பார்க்கிறேன். அவர்கள் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு செல்கையில் இதே உணர்வை கொண்டிருப்பார்கள்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்!

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்​கப்​பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்​தியா ம... மேலும் பார்க்க

சாட்ஜிபிடி மூலம் புத்தகங்கள்; ஒரே நாளில் ISBN பெற்ற நூல்கள், அதே நாளில் ஒப்புதல்! - FIR முழு விவரம்!

தமிழ்நாடு பொது நூலக இயக்ககம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு ச... மேலும் பார்க்க

``காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது?" - அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில், நள்ளிரவில் ஆய்வுக்கு சென்று பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத... மேலும் பார்க்க

'ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!'- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், " 'பெரியார் அறிவுலகம்' என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற 'அகல... மேலும் பார்க்க

'முதல்வர் தலைமையில் அமைச்சருக்கு டும் டும் டும்; டென்ஷன் மோடில் பொதுச் செயலாளர்!' - தவெக அப்டேட்ஸ்!

துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் என சர்ச்சைகளில் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது தவெக அரசு. இந்நிலையில், தவெக கட்சிக்குள் என்ன நடக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம். பர்வ... மேலும் பார்க்க

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நே... மேலும் பார்க்க