செய்திகள் :

``காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது?" - அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

post image

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில், நள்ளிரவில் ஆய்வுக்கு சென்று பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை என அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எம்.பி இன்பதுரை
அதிமுக எம்.பி இன்பதுரை

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

"இந்த போலீஸ் ஆய்வு வீடியோ போலியா? உண்மையா? உள்துறை முதலமைச்சர் வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது Cr.No.479/2024, Cr.No.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது? Prakash Singh v. Union of India (2006) 8 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும், முதல்வர் விஜய் அரசின் ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா? " என பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!'- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், " 'பெரியார் அறிவுலகம்' என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற 'அகல... மேலும் பார்க்க

'முதல்வர் தலைமையில் அமைச்சருக்கு டும் டும் டும்; டென்ஷன் மோடில் பொதுச் செயலாளர்!' - தவெக அப்டேட்ஸ்!

துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் என சர்ச்சைகளில் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது தவெக அரசு. இந்நிலையில், தவெக கட்சிக்குள் என்ன நடக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம். பர்வ... மேலும் பார்க்க

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நே... மேலும் பார்க்க

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென... மேலும் பார்க்க