`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?...
திருச்செந்தூர்: "ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி" - சேகர்பாபு விமர்சனம்
திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருப்பதாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
"தெருக்கூத்தாடிகளை எல்லாம் அழைத்து சென்று முதல்வருக்கு அரோகரா... அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்கிறார் ஒருவர். இன்னொருவர் சொல்கிறார் வேலை வாங்கி எப்படி முருகன் பாலகனாக இருந்து சூரனை வதம் செய்தாரோ, அது போல் வேல் பெற்று வதம் செய்த கடவுள் தமிழக முதல்வர் என்று வர்ணிக்கின்றார். அடுத்து துறையினுடைய அமைச்சர், வேலையும் சேவல் கொடியையும் இரண்டு கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

வேலை வாங்குபவர் சட்டை இல்லாமல் வெறும் உடம்போடுதான் வேலையும் சேவல் கொடியையும் வாங்க வேண்டும். வேலை வாங்குகின்ற ஆகமம் எங்குமே இல்லை. அந்த வேலை பிடிப்பதும் வேலை கொண்டு சூரசம்ஹாரம் செய்வதும் அந்த திருக்கோவிலினுடைய அர்ச்சகர்கள், திருக்கோவிலுக்கு சொந்தமானவர்கள் தான், அந்த பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இவர் வேலை கையில் பிடித்துக்கொண்டு சேவல் கொடியை கையிலே பிடித்துக் கொண்டிருக்கின்றார்.
முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்கள் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்ஹார விழா அல்ல, ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது.
நாங்களும் ஐந்து ஆண்டுகள் அனைத்து திருக்கோயில்களிலும் எங்குமே சமயங்களை மீறவில்லை, ஆகம விதிகளை மீறவில்லை. எங்குமே எங்கள் முதல்வரின் புகழ் பாடவில்லை. இறைக்கடவுளின் புகழைத்தான் நாங்கள் பாடினோம். ஆன்மிகத்துக்கு எதிரான அரசு என்று சொன்ன அந்த ஆட்சியில் ஆகமம் பின்பற்றப்பட்டது. திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்கள் முழுமையாக போற்றப்பட்டார்கள், மதிக்கப்பட்டர்கள். இந்த ஆட்சி கலப்பட ஆட்சி, அதற்கு நடைபெற்ற சூரசம்ஹாரமே சாட்சி" என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb











