செய்திகள் :

`வேல்முருகனின் அரோகரா முழக்கம்: முதல்வரை ஒப்பிட்டு துதி பாட யார் அனுமதி வழங்கியது?' டிடிவி கண்டனம்

post image

திருச்செந்தூர் கோயிலில் நேற்று (நவ.15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாடகர் வேல்முருகன்
பாடகர் வேல்முருகன்

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அறநிலையத்துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் உணர்வுபூர்வமான இந்நிகழ்வில் பக்தர்களின் மனதை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையையும் பலிகொடுப்பதா?

சாதி, மதம், அரசியல் கட்சி, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தையும் கடந்து நடைபெறும் புனிதமான நிகழ்வைத் தனிநபர் புகழ்ச்சிக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தியிருப்பது, தாங்கள் படும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட வந்திருந்த பக்தர்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி, அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா!

எனவே, திருக்கோயில்களின் ஆன்மிகப் புனிதத்தையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும், சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த தனிநபர் புகழ்ச்சிகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்த எம்.எல்.ஏவ... மேலும் பார்க்க

'அன்றைக்கு கிண்டல் பேசிய ரஜினிகாந்த்... ஹலோ மிஸ்டர் எக்ஸ் சீஃப் மினிஸ்டர்..!'-வைகோ பேசியதென்ன?

நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.``முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர... மேலும் பார்க்க

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும் போட்டி அணிகளும் உருவாகியுள்ளன. ஆளும் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் த... மேலும் பார்க்க

``தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" - டிடிவி தினகரன் கேள்வி!

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்ய... மேலும் பார்க்க

``14 ஆண்டுகால திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்ஸி பதிவு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக அவரின் மனைவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் வாழ்வில் பங்கெடுத்துக்... மேலும் பார்க்க

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' - கனிமொழி

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர். அந்தவகையில் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க