செய்திகள் :

``சூரசம்ஹார விழாவில் ` முதல்வருக்கு அரோகரா' முழக்கம்; மரபுகளை அவமதிக்கும் செயல்!"- அண்ணாமலை கண்டனம்

post image

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டதற்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

" நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா
திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவுறுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும் போட்டி அணிகளும் உருவாகியுள்ளன. ஆளும் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் த... மேலும் பார்க்க

``தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" - டிடிவி தினகரன் கேள்வி!

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்ய... மேலும் பார்க்க

``14 ஆண்டுகால திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்ஸி பதிவு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக அவரின் மனைவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் வாழ்வில் பங்கெடுத்துக்... மேலும் பார்க்க

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' - கனிமொழி

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர். அந்தவகையில் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``முதல்வர் விஜய்யின் இந்தப் போக்கு பெரிய பிரச்னையைக் கொண்டுவரும்" - துரைமுருகன்

`மேகதாதுவில் அணைக்கட்டுவது என் உரிமை. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை' என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா க... மேலும் பார்க்க

பிரான்ஸ் போராட்டம் உலகிற்கு என்ன சொல்கிறது? - Gen Z எழுச்சியின் நேரடி சாட்சியங்கள்!

தென்னாசிய நாடான நேபாளத்தில் ஆட்சியையே கவிழ்த்த இளம் தலைமுறையின் போராட்டம், இந்தியாவில் நீட் (NEET) மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் டெல்லி வீதிகளில் எதிரொலித்த மாணவர்களின் ஆவேசக் குரல்கள்... என உலகி... மேலும் பார்க்க