செய்திகள் :

O.M: "புட்டபர்த்தி சாய்பாபா அவர்களே கையில் தூக்கிப் பெயர் வைத்த குழந்தை சாய் பல்லவி!" - தனுஷ்

post image

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவியுடன் இணைந்து பணியாற்றியது குறித்து பேசியிருக்கிறார்.

ஓ.ம் படத்தில்...
ஓ.ம் படத்தில்...

தனுஷ் பேசுகையில், "மம்மூட்டி சார் பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2002-ஆம் ஆண்டு நான் 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்தபோது, ஜாம்பவான் நாகேஷ் சாருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்தது.

அப்போது ஒருநாள் என்னை அழைத்த நாகேஷ் சார், 'டேய், ஸ்பாட்டில் சிலர் பயங்கரமாக நடிப்பார்கள். பார்த்தாலே அவர்கள் நடிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அவர்களைப் பார்த்து நீ பயப்படவே வேண்டாம்.

ஆனால், சிலர் நடிப்பதே தெரியாது. சும்மா வந்து வசனம் பேசிவிட்டுப் போவது போல இருக்கும். அவர்களிடம்தான் நீ மிகவும் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு நடிகன் நடிப்பது வெளியே தெரியவே கூடாது. அவன்தான் சிறந்த நடிகன்' என்று சொன்னார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி சாருடன் நடிக்கும்போது அந்த அறிவுரை எனக்குப் பேருதவியாக இருந்தது. மம்மூட்டி சார் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. மேலும், பாலுமகேந்திரா சார், மம்மூட்டி சாரைப் பற்றி என்னிடம் நிறையப் பேசியிருக்கிறார். அவர் உங்களை வைத்து 'யாத்ரா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துள்ளார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என் மகனுக்கு 'யாத்ரா' என்று பெயர் வைத்ததற்கு, அந்தத் திரைப்படத்தின் தலைப்புதான் ஒரு வகையில் தூண்டுதலாக இருந்தது.

Dhanush - O.M Pre Release Event
Dhanush - O.M Pre Release Event

இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தும், படத்தை முடித்துவிட்டுப் போகாமல் புரொமோஷனுக்காகச் சென்னை, ஹைதராபாத் எனப் பயணிப்பது வியக்க வைக்கிறது" என்றவர் சாய் பல்லவி குறித்து, "இந்தப் படத்தின் இரண்டாவது ஹீரோ சாய் பல்லவிதான். மம்மூட்டி சாரைப் போலவே அவரும் தனது கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்து, ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாய் பல்லவி ஒரு இயற்கையின் குழந்தை. புட்டபர்த்தி சாய்பாபா அவர்களே தன் கையில் தூக்கிப் பெயர் வைத்த குழந்தை அவர். அதனால்தான் அவர் சாய் பல்லவி. அந்த ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்" எனப் பேசினார்.

O.M: "விஜய் சார் இனி நடிக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்; அதனால் தனுஷ் சார்.!" - சாய் பல்லவி

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஓ.ம் படத்தில்...இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்... மேலும் பார்க்க

O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்க... மேலும் பார்க்க

Sandiyar: "அப்போதே 'சண்டியர்' என்ற பெயரில் படம் வெளியாகிவிட்டது" - படத் தலைப்பு குறித்து தமிழ்குமரன்

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

Scene: "இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” - சூர்யா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேச... மேலும் பார்க்க

John Doe Review: க்ரைம் த்ரில்லர் டெம்ப்ளேட்டில் சில சர்ப்ரைஸ்கள்! ரசிக்க வைக்கிறானா இந்த `ஜான் டோ'?

காவல் அதிகாரியாக இருக்கும் தந்தையின் கண்டிப்பாலும், அவர் செய்யும் கேலியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). பிறகு, வளர்ந்து அவரைப் போலவே காவல் அதிகாரியாக கேரளாவில் பணியில் அமர்கிற... மேலும் பார்க்க

மலையாளப் படத்தின் இந்தி வெர்ஷனில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்; விகடன் பேட்டியில் பகிர்ந்த இயக்குநர்!

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'. ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய... மேலும் பார்க்க