செய்திகள் :

O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்

post image

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்திருந்தது. அதன் காணொளிகள் தற்போது வெளியாகி வருகின்றன.

ஓ.ம் படத்தில்...
ஓ.ம் படத்தில்...

'தேரே இஷ்க் மெயின்' படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஒரு ரீல் வைரலானது. அதில் தனுஷின் உடையை அவரின் காஸ்டியூம் டிசைனர் சரி செய்துவிடும்போது, அதை தனுஷ் கண்டுகொள்ளாமல் செல்கிறார் எனக் குறிப்பிட்டு அதனைச் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டனர். அதற்கு இந்த நிகழ்வில் தனுஷ் விளக்கமளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "காவ்யா என்னுடைய ஸ்டைலிஸ்ட். உங்களுடைய கடின உழைப்புக்கு என் நன்றி. தனியாளாக அவ்வளவு வேலைகளைச் செய்யக்கூடிய நபர் அவர்.

வேலையில் இறங்கிவிட்டால் மிகத் தீவிரமாக அதைச் செய்து முடித்திடுவார். நான் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் புரொமோஷனுக்காகச் சென்றிருந்தபோது, என் பேண்ட் திரும்பியிருந்தது.

Dhanush - O.M
Dhanush - O.M

அப்போது, காவ்யா பப்ளிக் என்றுகூடப் பார்க்காமல் என் உடையைச் சரி செய்தார். அவர் அதைச் சரி செய்ததை நான் கவனிக்கவில்லை. அதைக் கடந்து சென்றுவிட்டேன். அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்.

'எவ்வளவு திமிரு பாரு அவனுக்கு' என்று திட்டினார்கள். சில நேரங்களில் அவர் கொஞ்சம் குறைவாகவே வேலை செய்யலாம் என நினைக்கிறேன்" எனப் பேசினார்.

Sandiyar: "அப்போதே 'சண்டியர்' என்ற பெயரில் படம் வெளியாகிவிட்டது" - படத் தலைப்பு குறித்து தமிழ்குமரன்

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

Scene: "இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” - சூர்யா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேச... மேலும் பார்க்க

John Doe Review: க்ரைம் த்ரில்லர் டெம்ப்ளேட்டில் சில சர்ப்ரைஸ்கள்! ரசிக்க வைக்கிறானா இந்த `ஜான் டோ'?

காவல் அதிகாரியாக இருக்கும் தந்தையின் கண்டிப்பாலும், அவர் செய்யும் கேலியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). பிறகு, வளர்ந்து அவரைப் போலவே காவல் அதிகாரியாக கேரளாவில் பணியில் அமர்கிற... மேலும் பார்க்க

மலையாளப் படத்தின் இந்தி வெர்ஷனில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்; விகடன் பேட்டியில் பகிர்ந்த இயக்குநர்!

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'. ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய... மேலும் பார்க்க

John Doe: 'என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!'- அர்ஜுன் தாஸ்

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'. ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய... மேலும் பார்க்க

சார்பட்டா பரம்பரை : சாதிய வீரமெனும் இழிவு! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 41

`சினி'ஸ்கோப் 41சார்பட்டா பரம்பரைஅது ஜனவரி 31, 1976.கபிலனும், வேம்புலியும் குத்துச்சண்டை வளையத்துக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பரபரப்பான முக்கியமான ஆட்டம். ரங்கன் வாத்தியாரைப் பொருத்தவரை அ... மேலும் பார்க்க