செய்திகள் :

"அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள்; ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா?" - நாகர்ஜுனா

post image

மகேஷ் உப்பாலா இயக்கத்தில், அறிமுக நடிகர் அனீஷ், நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனீஷ், டோலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Itlu Arjuna Movie
Itlu Arjuna Movie

இந்தப் படத்தை நடிகர் நாகார்ஜுனா வெளியிட்டார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நாகார்ஜுனா திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

இப்படத்தைத் தான் வெளியிட்டதற்கான காரணம் குறித்துப் பேசிய நாகார்ஜுனா, "படக்குழுவினர் முதலில் படத்தின் கதையை என்னிடம் காட்டினார்கள்.

என் நண்பரின் மகன் நடிக்கிறார் என்பதற்காக மட்டும் நான் இப்படத்தை வெளியிடவில்லை. அப்படி வெளியிடுவதால் மட்டும் படம் வெற்றி பெற்றுவிடாது. பலரும் அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள், ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா என்ன?

Nagarjuna
Nagarjuna

யார் படத்தை வழங்குகிறார்கள் என்பதை விட, படத்தில் நல்ல கன்டென்ட் இருந்தால் மட்டுமே அது வெற்றி பெறும்" என்றவர், தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து எழும் விமர்சனங்கள் பற்றிப் பேசுகையில், "திரைப்படங்களை ரிலீஸ் தேதிக்குக் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடித்துவிட வேண்டும்.

அப்போதுதான் 75 சதவீதத்தில் இருக்கும் ஒரு படத்தை 150 சதவீதத்திற்கு மெருகேற்ற முடியும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் தொழில்நுட்பப் பணிகளை நேர்த்தியாகச் செய்யப் போதிய கால அவகாசம் ஒதுக்குவது மிக அவசியம்" எனப் பகிர்ந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமான 'கிங் 100' கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்ற அப்டேட்டையும் பகிர்ந்துகொண்டார்.

Ram Charan: "அதையே ஒரு தாய் செய்யும்போது ஏன் யாரும் கைதட்டுவதில்லை?" - ராம்சரணின் மனைவி உபாசனா

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'சி.ஐ.ஐ பார்ட்னர்ஷிப்' மாநாட்டில் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷுடன் உரையாடிய நடிகர் ராம் சரணின் மனைவியும், தொழிலதிபருமான உபாசனா கொனிடேலா, குழந்தை வளர்ப்பு தொடர்பாகப்... மேலும் பார்க்க

Pawan Kalyan: "நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்" - பிரிவை அறிவித்த பவன் கல்யாண் - அன்னா

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் 1997-ல் நந்தினி என்பவரைத் திருமணம் செய்து 1999-ல் பிரிந்தார். பின்னர் 2009-ல் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்தார். இவர... மேலும் பார்க்க

Anupama Parameswaran: "அப்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது!" - அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'மரீசிக்கா' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார். Anupama Parameswaran | அனுபமா... மேலும் பார்க்க

Rashmika: 'இதில் என்ன தவறு இருக்கிறது?'- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப... மேலும் பார்க்க

"அதைத் தவறாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனம்" - Troll ஆன தன் இந்தி உச்சரிப்பு குறித்து ராஷ்மிகா பதிலடி

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களது நடிப்ப... மேலும் பார்க்க

Nani: "பாக்ஸ் ஆபீஸ் வசூல், வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு படங்களை ஒப்புக்கொள்வதில்லை!" - நானி

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் 'தி பாரடைஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. அவர் சமீபத்தில் வெரைட்டி இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும், புதுமுக இயக்க... மேலும் பார்க்க