செய்திகள் :

Anupama Parameswaran: "அப்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது!" - அனுபமா பரமேஸ்வரன்

post image

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'மரீசிக்கா' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்
Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் அவர், "நான் எதற்காகவெல்லாம் முன்பு குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேனோ, அதே விஷயங்களை மற்றவர்கள் செய்யும்போது எப்படி இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது?

சில நேரங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. அதைச் செய்ய யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மையான விஷயம் என்பதை இது புரிய வைக்கிறது.

கதாபாத்திரங்கள் மாறும்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது.

Anupama Parameshwaran
Anupama Parameshwaran

மேலும், சமூக வலைத்தளப் பக்கத்தில் மக்களுடன் உரையாடுவதை நான் எப்போதுமே விரும்புகிறேன். இது பல ஆண்டுகளாக நான் செய்து வரும் ஒரு விஷயமே தவிர, நேற்று புதிதாகக் கண்டறிந்த ஒன்றல்ல.

நான் தொடர்ந்து உண்மையாகவும் நிலையான முறையிலும் இதையெல்லாம் செய்வேன். ஆனால், அதை எனது சொந்த அமைதியை இழந்து செய்ய மாட்டேன்.

அன்பும் நன்றியுணர்வும் உண்மையானவையாக இருக்க, அவை எப்போதும் இணையத்தில் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமில்லை." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Rashmika: 'இதில் என்ன தவறு இருக்கிறது?'- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப... மேலும் பார்க்க

"அதைத் தவறாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனம்" - Troll ஆன தன் இந்தி உச்சரிப்பு குறித்து ராஷ்மிகா பதிலடி

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களது நடிப்ப... மேலும் பார்க்க

Nani: "பாக்ஸ் ஆபீஸ் வசூல், வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு படங்களை ஒப்புக்கொள்வதில்லை!" - நானி

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் 'தி பாரடைஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. அவர் சமீபத்தில் வெரைட்டி இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும், புதுமுக இயக்க... மேலும் பார்க்க

'ராஷ்மிகா 100 முறை கேட்ட பிறகே சம்மதித்தேன்.!'- விஜய் தேவரகொண்டாவின் பேச்சு; கொந்தளித்த நெட்டிசன்கள்

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களது நடிப்... மேலும் பார்க்க

"இந்திய புராண கதைகளை திரையில் காட்சிப்படுத்திய விதம் எனக்கு திருப்தி அளித்ததே இல்லை!" - ராஜமெளலி

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, 'வாரணாசி' பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். Mahesh Ba... மேலும் பார்க்க

"திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இதுதான். விஜய் தேவ... மேலும் பார்க்க