O.M: "விஜய் சார் இனி நடிக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்; அதனால் தனுஷ் சார்.!" -...
டேட்டிங் செயலி: காதலைதேடி இந்தியா வந்த கனடா பெண்; உண்மை வயது தெரிந்து அதிர்ந்த இளைஞர்! நடந்தது என்ன?
கனடாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண்மணி ஒருவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதின் என்ற நபருடன் பழகத் தொடங்கினார். நாளடைவில் இவர்களின் நட்பு சமூக வலைதளங்கள் வழியாக காதலாகத் தொடர்ந்து, இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து, நிதினைத் திருமணம் செய்யும் நோக்கில் அந்தப் பெண் சுற்றுலா விசாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்திற்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிதின், தனது மாமா மற்றும் அத்தையின் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு இருவரும் சுமார் இரண்டு நாட்கள் ஒன்றாகத் தங்கியிருந்தனர். இந்நிலையில், அந்தக் கனடாப் பெண்ணுக்கு 61 வயதாகிறது என்ற உண்மை நிதினுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஓராண்டாகத் திட்டமிட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தன. நிதினின் இந்த முடிவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த பிரச்சினை குறித்துப் புகார் அளித்தார்.
தூதரக அதிகாரிகள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில், நவம்பர் 14-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி நிதினைக் கைது செய்த போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். பாதிக்கப்பட்ட கனடாப் பெண் மீட்கப்பட்டு, கோட்புட்லியில் உள்ள தடுப்பு மையம் ஒன்றில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

பானிபட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிதின் குறித்தும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீண்டும் கனடாவிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைக் கனடா தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
டேட்டிங்க் செயலியால் மலர்ந்த காதல் உண்மை தெரிந்தவுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb











