செய்திகள் :

`ஆட்டம் போடலாம்னு நினைச்சா.!' - விஜய் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கிறார்களா தவெகவினர்?

post image

இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி அறுபதாண்டு தமிழக அரசியலை மாற்றி ஆட்சி பீடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் அமர்ந்து ஆறு மாதங்கள் கடந்திருக்கின்றன.

விஜய் என்ற ஒரு முகத்துக்காக வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்த ஆறு மாதம் எப்படி நகர்ந்தது? ஏதேனும் அசௌகரியத்தைச் சந்தித்தார்களா அவர்கள்?

'புகாருக்கு ஆளான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குறித்த விவரம் கிடைக்குமா' என சாட் ஜி பி யிடம் கேட்டால் கூட, வந்து விழுந்த பட்டியலில் எண்ணிக்கை டஜனைத் தாண்டி விட்டது.

அருள் விக்னேஷ்

கிறிஸ்டோபர் - குமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்

சசிகுமார் - அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர்

பிரகாஷ் என்ற குட்டி - திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர்

ரமேஷ் - குளித்தலை ஒன்றியச் செயலாளர்

விஜய் மோகன் - ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர்

வேம்புலி - ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர்

மதன் ராஜ் - வில்லிவாக்கம் பகுதி துணைச் செயலாளர்

பாம்பு தினேஷ் - சென்னை ஆர் கே நகர் 43 வது வார்டு பொறுப்பாளர்

ஆனந்த் - சென்னை அசோக் நகர் நிர்வாகி

கண்ணன் - மதுரை கீழ்மாத்தூர் நிர்வாகி

பிரைடர், ரூஸ்வெல்ட் - சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்

என்ற இந்த 12 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குகளும் பதிவாகி இருக்கின்றனவாம்.

மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்

இவர்கள் தவிர திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது புகார் கொடுத்த பெண் புகாரைத் திரும்ப பெற்றுக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டும் இன்னும் அடங்கியபாடில்லை.

பெண்களின் பாதுகாப்புக்கென 'சிங்கப் பெண்' சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய முதல்வரின் இந்தச் சொந்தக் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என எதிர்க்கட்சிகள் இல்லை, கட்சி சார்பற்ற பொது மக்களே கேட்கிறார்கள்.

பதில் முதல்வர்தான் சொல்ல வேண்டும்.!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

பெண்களுக்கெதிரான இந்த தொந்தரவுகள் தாண்டி, மனு கொடுக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் அடித்ததாக எழுந்த புகார், நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன், மெத்தம்பெட்டமைன் கடத்தலில் புகாரில் கைது செய்யப்பட்டது, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களை அவரது ஆதரவாளர்கள் மிரட்டியது என நீண்டு கொண்டே போகிறது வம்புகளின் பட்டியல்.

முதல்வரின் பாஷையில் சொல்ல வேண்டுமானால் வாட்ஸ் ப்ரோ , இட்ஸ் ராங் ப்ரோ என்றுதான் சொல்ல வேண்டும்.

இனியும் இந்த போக்கு தொடர்ந்தால், நீங்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனையை துயர சம்பவமாக தமிழக மக்களை நினைக்க வைத்து விடுவார்கள் இவர்கள்.

விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே

இந்த இடத்தில் 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என நீங்கள் பதவி ஏற்ற போது பேசிய சில வார்த்தைகளை நினைவு கூர்வது ரொம்பவே அவசியமானதாகப் படுகிறது.

'பவர் வந்திடுச்சுனு யாராவது ஆட்டம் போடலாம்னு நினைக்காதீங்க. இங்க என் தலைமையிலான ஒரே பவர் தான்' என்பதுதான் அந்த வார்த்தைகள்.

'கட்சிக்காரங்களுக்கு தான் இது' என அன்று உற்சாகத்துடன் கை தட்டினர் தமிழக மக்கள்.

இப்போது எல்லோருக்கும் எழும் கேள்வி, முதல்வரின், தலைவரின் பேச்சை தவெகவினரே கேட்க மாட்டார்களோ?' என்பதுதான்.

லலித் மோடி: ''இங்கிலாந்துதான் என் வீடு!'' - இந்தியாவில் விசாரணை ; இங்கிலாந்தில் குடியுரிமை

16 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறியவர்; லண்டனில் குடியுரிமை பெற்று புதிய அத்தியாயம் தொடங்கியதாக அறிவிப்பு!இந்திய கிரிக்கெட்டின் வர்த்தக முகத்தையே மாற்றியமைத்த இந்தியன் பிரீமியர் லீக் (IP... மேலும் பார்க்க

ம.பி., புலிகள் சரணாலய அதிகாரி வீடு, அலுவலகத்தில் ரெய்டு; 2.5 கிலோ தங்கம் உட்பட ரூ. 7.5 கோடி பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் சஞ்சீவ் குமார் சர்மா என்பவர் பச்மர்கியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக மாநில லோக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண்: "வருடம் ஒரு நாள் தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்னை?" - அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக 'We The Leaders' அமைப்பு தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..."திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திக... மேலும் பார்க்க

மேகதாது அணை: நாளை டெல்லி செல்லும் விஜய்; "காங்கிரஸ் தலைமையிடம் பேசுங்கள்" - பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுத்து வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைமையிடம் பேசுமாறு வலியுறுத்தி உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

"பெண் கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?" - அண்ணாமலை கேள்வி

கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியதாவது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான உரிமைய... மேலும் பார்க்க