செய்திகள் :

`கரீனா கபூர் அணிந்த 200 ஆண்டு பழமையான மரகத நெக்லஸ்' - திருக்குர்ஆன் வசனம் இடம்பெற்றதால் சர்ச்சை!

post image

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தீபாவளி பண்டிகையையொட்டி அணிந்திருந்த ஆபரணம் ஒன்று, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பாரம்பரிய உடையணிந்த புகைப்படங்களை கரீனா கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆடை வடிவமைப்பாளர் புனித் பலானா வடிவமைத்த வெள்ளி நிற கஃப்தான் உடை மற்றும் தலைப்பாகையுடன் கரீனா இருக்கும் புகைப்படங்களை ரியா கபூர் பகிர்ந்திருந்தார். அதில், போபால் நவாபிற்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான 'கல்கி' மற்றும் போபால் பேகத்திற்குச் சொந்தமான 30 காரட் மரகத நெக்லஸ் ஆகியவற்றை கரீனா அணிந்திருந்தார்.

இவை கரீனாவின் கணவர் சைஃப் அலிகானின் பாட்டியும், போபால் நவாபின் மகளுமான சஜிதா சுல்தான் வழியாக வந்த அரச குடும்பத்துப் பாரம்பரிய நகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புகைப்படங்களில் கரீனா அணிந்திருந்த போபால் அரச குடும்பத்து பதக்கத்தில், திருக்குர்ஆனின் புனித வசனமான 'ஆயத்துல் குர்ஸி' (Ayat-ul-Kursi) பொறிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.

திருக்குர்ஆனின் புனித வசனங்களை வெறும் ஃபேஷன் அடையாளமாகப் பயன்படுத்துவதும், இத்தகைய ஆடைகளுடன் அதை அணிவதும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அந்தப் புகைப்படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், கரீனா கபூர் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அப்பாஸ் ஹபீஸ்
அப்பாஸ் ஹபீஸ்

இந்த நடவடிக்கையை ஒரு இஸ்லாமியராகத் தனது தனிப்பட்ட முறையில் எடுத்துள்ளதாகவும், இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அப்பாஸ் ஹபீஸ் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகைப்படங்களை நீக்கி மன்னிப்பு கேட்கத் தவறினால், காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலமாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்தச் சர்ச்சை குறித்து கரீனா கபூர் தரப்பிலிருந்தோ அல்லது ரியா கபூர் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

9-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்; ரூ2.30 கோடியில் BMW காரை பரிசளித்த தந்தை!

Wமேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சம்சுதீன் மித்யா. இவரது மகன் முகமது தல்ஹா, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சிறந்த விளங்கும் தல்ஹா, ந... மேலும் பார்க்க

Gen Z Baba: `பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்' - வைரல் ஜென் ஸீ பாபா மனவேதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ சாஷ்வத் (19). இளம் வயதிலேயே ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி வரும் இவரை, இணையவாசிகள் பலர் 'ஜென் ஸீ பாபா' (Gen Z Baba) என்று செல்... மேலும் பார்க்க

தீவிர தோல் நோய் பாதிப்பு: ``என்ன நடந்தாலும் பணியைத் தொடர்வேன்' - பிட்டு தபாஹி உறுதி

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு த... மேலும் பார்க்க

உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள சாடோங் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சியோ சியோ சூ (Xiao Xiao Xu). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். தாயாரும் ம... மேலும் பார்க்க

``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" - ஒற்றை ஆளாக நதியை சுத்தம் செய்த பிட்டு ஆதங்கம்!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தப... மேலும் பார்க்க

ஜெர்மனி: 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ; அதிர்ச்சியில் காவல்துறை - என்ன நடந்தது?

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று தகாதமுறையில் நடந்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியின் கொலோன் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே 16 வயது சிறுமி தன் தோழிகளுடன் நி... மேலும் பார்க்க