செய்திகள் :

கந்த சஷ்டி விரதம் : 8 லிங்கங்கள்; 4 உற்சவர்கள்; அற்புத தகவல்கள் - திருச்செந்தூரின் கடலோரத்தில் - 4

post image

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் திருச்செந்தூர். தானே விரும்பிவந்து திருச்செந்தூரில் கோயில்கொண்டான் அந்த செந்தில்நாதன் எனக்கண்டோம். அவன் ஆலய மகிமைகளையும் அறிந்துகொள்வோம். திருச்செந்தூர் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு - தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு - மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.

இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதிகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை. ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் செந்திலாண்டவர். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய - சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே!

முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.

பிற ஆலயங்களில் மூலவருக்கு ஒரு உற்சவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கே சண்முகர், ஜெயந்திநாதர், குமாரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருப்பது மிகவும் சிறப்பு.சூரனின் வதத்திற்கு பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முருகன் இங்கு சிவபூஜை செய்கிறார். அதன் அடையாளமாக தனது வலது கையில் தாமரை மலருடனும், தலையில் ஜடா மகுடத்துடனும் விளங்குகிறார். மூலவருக்கு இடது பின்புறச் சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது. இவருக்குத் தீபாராதனை செய்த பின்னரே மூலவருக்கு தீபாராதனை செய்யப்படுகிறது. அதேபோல், சண்முகர் சந்நிதிக்குப் பின்புறமும் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் தீபாராதனை ஒளியிலே நமக்குக் காட்சித் தருகின்றன. மேலும், முருகன் சந்நிதி கருவறை பின்புறத்தில் வலப்புறத்தில் பஞ்சலிங்க சந்நிதி அமைந்திருக்கிறது.

மார்கழி மாதத்தில் தேவர்கள் இந்த பஞ்சலிங்க சந்நிதியை வழிபடுவதாக ஐதிகம். இந்த பஞ்ச லிங்கங்களைத் தவிர மற்ற லிங்கங்களுக்கே இங்கே பூஜை நடக்கும். ஏனெனில், பஞ்ச லிங்கங்களுக்கு முருகனே பூஜை செய்வதாக ஐதிகம். பஞ்சபூதங்களும் ஐக்கியமாகும் அற்புதத் தலம் திருச்செந்தூர். இரண்டு கொடி மரங்கள் இருப்பது இத்தலத்துக்கே உரிய தனிச் சிறப்பம்சம்.

மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூர்

சூரியன், குரு, செவ்வாய் கிரகதோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு அருளும் தலம் திருச்செந்தூர். இங்கே தட்சிணாமூர்த்தி விசேஷம். வியாழக் கிழமைகளில் செந்திலாண்டவரையும் தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து வழிபட்டால் குருபலம் கூடிவரும்; இல்லங்களில் மங்கல காரியங்கள் ஸித்திக்கும்.அதேபோல் முருகப்பெருமான் செவ்வாய்க்கு அதிபதி. தொழிலில், பணிகளில் மறைமுக எதிரிகளால் பாதிப்பு அடையும் அன்பர்கள் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரை காலத்தில் திருச்செந்தூரானை தரிசித்து வழிபடுவது விசேஷம். அதனால் பகைவர் தொல்லை மறையும். வாழ்வுக்குப் பகையான பெரும்பிணி, வறுமை, எதிர்பாராத தடைகள் ஆகியவையும் விலகும். மட்டுமன்றி செவ்வாய் தோஷ பாதிப்புகளும் நீங்கும். மாதம்தோறும் சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை தரிசித்து வேண்டினால், பிள்ளை வரம் கிடைக்கும்.

திருச்செந்தூர் மகிமைகளைத் தொடர்ந்து தியானிப்போம்.

கந்த சஷ்டி விரதம்: 'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - ஆறுமுகன் நம் மனதில் இன்று உதிக்கட்டும்...

தட்சன் பக்தன்தான். பக்தியாலும் தவத்தினாலும் முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் பிரபஞ்சத்துக்கு எடுத்துக் காட்டியவன். பிரபஞ்சத்தின் முதல் மகளே தனக்கு மகவாக வரவேண்டும் என்று வரம் கேட்டான். அப்போது அந்த... மேலும் பார்க்க

'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - திருச்சீரலைவாய் தல புராணம் முதல் கந்த சஷ்டி விரதம் வரை !

திருச்செந்தூர்... உலகெங்கும் வாழும் முருகபக்தர்களின் மனம் கவர்ந்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அந்த அழகனை திருச்செந்தூர் வந்து தரிசித்துவிடமாட்டோமா என்று ஏங்கும் நெஞ்சங்கள் கோடானகோடி. அதுவும் கந்த சஷ்... மேலும் பார்க்க

Kanda Sasti Viratham | கந்த சஷ்டி விரதம் - உடை முதல் உணவு வரை முழுமையான வழிகாட்டல் - இரா. விஜயகுமார்

கந்த சஷ்டி விரதத்தின் உண்மையான தத்துவம் என்ன? ஆறு நாள்களும் எப்படி விரதம் இருக்க வேண்டும்? பூஜை செய்யும் முறை, அணிய வேண்டிய உடை, நைவேத்தியம், உணவு முறைகள் என கந்தபுராணம் கூறும் விரத விதிகளை விளக்குகிற... மேலும் பார்க்க

'சும்மா இரு' – முருகன் அருளிய ஞான உபதேசம் | கந்தர் அனுபூதி பாடல் 12 | வாதவூரன் | வாரியார் சுவாமிகள்

கந்தர் அனுபூதியின் 12-வது பாடலான 'செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்...' என்னும் பாடலின் ஆழமான பொருள் என்ன? அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருளிய 'சும்மா இரு' என்ற ஞான... மேலும் பார்க்க

உங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் கல்யாணம் கைகூட; ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

திருமண வயதை அடைந்த பிறகும் சரியான வரன் கிடைக்காமல் தள்ளிப்போனாலும், திருமணத் தடை நீங்கவும், எந்த விதச் சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில் - பொருத்தமான முறையில் திரும... மேலும் பார்க்க

ஐப்பசி அன்னாபிஷேகம் அக் - 25... வீட்டில் உணவுப்பஞ்சம் வாராதிருக்க இதைக் கட்டாயம் செய்யுங்கள்!

ஐப்பசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு ஐப்பசி பௌர்ணமி, அன்னாபிஷேகம்தான். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் இது. இந்த மாதம்... மேலும் பார்க்க