செய்திகள் :

9-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்; ரூ2.30 கோடியில் BMW காரை பரிசளித்த தந்தை!

post image

Wமேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சம்சுதீன் மித்யா. இவரது மகன் முகமது தல்ஹா, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சிறந்த விளங்கும் தல்ஹா, நீண்ட நாட்களாக 'பிஎம்டபிள்யூ எம்4' ரக கார் மீது மிகுந்த ஆசை கொண்டிருந்தார். நடந்து முடிந்த அரைஆண்டு தேர்வில் தல்ஹா மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். மகனின் இந்தச் சாதனையால் மகிழ்ச்சியடைந்த சம்சுதீன், அவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தார். இதற்காகத் தனிப்பட்ட முறையில் மும்பை வரை சென்று, சுமார் ரூ. 2.30 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி வந்து மகனுக்குப் பரிசளித்துள்ளார்.

தொழிலதிபரான சம்சுதீன், ஏற்கனவே ஆடம்பர கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவரது கரேஜில் ரேஞ்ச் ரோவர், வால்வோ, மஹிந்திரா தார் மற்றும் ஹூண்டாய் அல்காஸர் போன்ற கார்கள் ஏற்கனவே உள்ளன. பாலிவுட் நடிகர் ஷாருக்கானைப் போல, தனது அனைத்து கார்களுக்கும் "555" என முடியும் பதிவு எண்களைப் பெறுவதிலும் இவர் தனி விருப்பம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. "என் மகன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். இந்த காரை வாங்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் விருப்பம். இறைவனின் அருளால் அவனுக்கு இந்த பரிசை வழங்க முடிந்தது" என சம்சுதீன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கோடி ரூபாய் மதிப்பிலான கார் கிடைத்தாலும், தல்ஹாவிற்கு இன்னும் ஓட்டுநர் உரிமம் பெறும் வயது ஆகவில்லை என்பதால், அவர் காரை ஓட்டப்போவதில்லை. "தற்போது எனது முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை தந்தை காரை ஓட்டும்போது அருகில் அமர்ந்து பயணம் செய்வேன்" என அந்த மாணவர் புன்னகையுடன் தெரிவித்தார்.
9-ஆம் வகுப்பு மாணவனுக்கு ரூ. 2.30 கோடியில் சொகுசு கார் பரிசளிக்கப்பட்ட செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Gen Z Baba: `பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்' - வைரல் ஜென் ஸீ பாபா மனவேதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ சாஷ்வத் (19). இளம் வயதிலேயே ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி வரும் இவரை, இணையவாசிகள் பலர் 'ஜென் ஸீ பாபா' (Gen Z Baba) என்று செல்... மேலும் பார்க்க

தீவிர தோல் நோய் பாதிப்பு: ``என்ன நடந்தாலும் பணியைத் தொடர்வேன்' - பிட்டு தபாஹி உறுதி

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு த... மேலும் பார்க்க

உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள சாடோங் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சியோ சியோ சூ (Xiao Xiao Xu). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். தாயாரும் ம... மேலும் பார்க்க

``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" - ஒற்றை ஆளாக நதியை சுத்தம் செய்த பிட்டு ஆதங்கம்!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தப... மேலும் பார்க்க

ஜெர்மனி: 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ; அதிர்ச்சியில் காவல்துறை - என்ன நடந்தது?

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று தகாதமுறையில் நடந்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியின் கொலோன் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே 16 வயது சிறுமி தன் தோழிகளுடன் நி... மேலும் பார்க்க