`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?...
AOT: "ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும்..." - துல்கர் சல்மான் பற்றி அல்லு அர்ஜுன்
டோலிவுட் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன், சாத்விகா வீராவல்லி ஆகியோர் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அல்லு அர்ஜுன் கலந்துகொண்டார்.

அல்லு அர்ஜுன் பேசுகையில், "துல்கர் சல்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய முதல் மலையாளப் படத்திலிருந்தே அவரின் வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன்.
அவருடைய கதைத் தேர்வுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பன்முகத்தன்மை கொண்ட, மிக இனிமையான மனிதர் அவர். அவரை எப்போது சந்தித்தாலும், ஏற்கெனவே நன்கு பழகிய ஒருவரைச் சந்திப்பது போன்ற உணர்வே ஏற்படும்.
ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும், மிகவும் எளிமையாகவே நடந்துகொள்வார். தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். இந்தப் படத்தின் மையக்கரு மிகவும் அற்புதமானது.
ஒவ்வொரு பெண்ணின் கனவையும் நனவாக்குவதைப் பற்றியது. படத்தின் டீசரைப் பார்த்தபோதே அந்த நேர்மறையான ஆன்மாவை உணர முடிந்தது" எனப் பேசினார்.
தொடர்ந்து துல்கர் சல்மான் பேசும்போது, "'ஆகாசம்லோ ஒக தாரா' என் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களில் ஒன்று.
'லக்கி பாஸ்கர்' ரிலீஸுக்காகக் காத்திருந்த நேரத்தில், இந்தப் படம் கைவிட்டுப் போய்விடுமோ என்று நான் கவலைப்பட்டேன். ஒரு விஷயத்தை இழக்கப் போகிறோம் என்று தெரியும்போதுதான் அதன் அருமை நமக்குப் புரியும்.

அல்லு அரவிந்த் சார் தினமும் படப்பிடிப்புத் தளத்தில் இந்தப் படத்தைத் தன் சொந்தக் குழந்தை போலப் பார்த்துக்கொண்டார்.
அமெரிக்காவில் படித்து வேலை பார்த்துக்கொண்டிருந்த சாத்விகா வீராவல்லியைச் சமூக வலைதளம் மூலமாகக் கண்டறிந்து இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்." எனப் பேசினார்.
















