செய்திகள் :

"நாங்கள் திருமண உறவில்தான் இருக்கிறோம்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!

post image

நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநருமான கிருஷ்ண வம்சியும் பிரிந்துவிட்டதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

தற்போது அதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கமளித்திருக்கிறார். சமீபத்தில் 'ரா டாக்ஸ் வித் வி.கே' சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் பேசியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், "நாங்கள் 100 சதவீதம் இப்போதும் திருமண பந்தத்தில்தான் இருக்கிறோம். ஆனால், எங்களின் வசதிக்கேற்ப, மிகவும் மகிழ்ச்சியாக இரண்டு வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகிறோம்.

என் மகன் ரித்விக் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் இருந்தேன். 15 நாட்களுக்கு ஒருமுறை ஹைதராபாத்துக்கு வந்து செல்வேன்.

அடிக்கடி நடந்த வேலைநிறுத்தங்களால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், எனக்கும் என் மகனுக்கும் அது மிகவும் சிரமமாக இருந்தது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வம்சி ஆரம்பத்திலிருந்தே 'எதற்குத் திருமணம்? நாம் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழலாமே' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஒருவேளை நான் அப்போதே அதற்குச் சம்மதம் சொல்லியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஏனென்றால், திருமணம் என்பது இரு குடும்பங்களையும் சுற்றியிருக்கும் பல மனிதர்களையும் உள்ளடக்கியது.

Ramya Krishnan - Krishna Vamsi
Ramya Krishnan - Krishna Vamsi

இதனால், நம் துணையுடனான உறவை விட, மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமே அதிகமாக இருக்கிறது. என் கணவருடனான என் உறவு எப்போதும் மிகச்சிறப்பாகவே இருக்கிறது.

நாங்கள் தனித்தனியாக வசிப்பதால்தான் இப்போதும் திருமண பந்தத்தில் நீடிக்கிறோம் என்று நினைக்கிறேன். எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, இப்போது நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம்" எனப் பேசியிருக்கிறார்.

AOT: "ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும்..." - துல்கர் சல்மான் பற்றி அல்லு அர்ஜுன்

டோலிவுட் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன், சாத்விகா வீராவல்லி ஆகியோர் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ... மேலும் பார்க்க

"அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள்; ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா?" - நாகர்ஜுனா

மகேஷ் உப்பாலா இயக்கத்தில், அறிமுக நடிகர் அனீஷ், நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனீஷ், டோலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டிய... மேலும் பார்க்க

Ram Charan: "அதையே ஒரு தாய் செய்யும்போது ஏன் யாரும் கைதட்டுவதில்லை?" - ராம்சரணின் மனைவி உபாசனா

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'சி.ஐ.ஐ பார்ட்னர்ஷிப்' மாநாட்டில் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷுடன் உரையாடிய நடிகர் ராம் சரணின் மனைவியும், தொழிலதிபருமான உபாசனா கொனிடேலா, குழந்தை வளர்ப்பு தொடர்பாகப்... மேலும் பார்க்க

Pawan Kalyan: "நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்" - பிரிவை அறிவித்த பவன் கல்யாண் - அன்னா

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் 1997-ல் நந்தினி என்பவரைத் திருமணம் செய்து 1999-ல் பிரிந்தார். பின்னர் 2009-ல் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்தார். இவர... மேலும் பார்க்க

Anupama Parameswaran: "அப்போது விதிகளும் மாறுவது வேடிக்கையாக இருக்கிறது!" - அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு 'மரீசிக்கா' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார். Anupama Parameswaran | அனுபமா... மேலும் பார்க்க

Rashmika: 'இதில் என்ன தவறு இருக்கிறது?'- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப... மேலும் பார்க்க