செய்திகள் :

தேர்வுக்குழுவை புறக்கணித்த‌து ஏன்? திரைப்பட மானியம் வழங்கிய‌தில் முறைகேடா? கவனிப்பாரா ராஜ்மோகன்?

post image

குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

சிறந்த கருத்தைச் சொல்லும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் போனால், தயாரிப்பாளர் நஷ்டமடைய கூடாது என்கிற நல்ல நோக்கத்தில் இந்த மானியத் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

திரைப்படம் எடுத்து பொருளாதார ரீதியில் பின்னடவை சந்தித்த சில தயாரிப்பாளர்களுக்கு அரசின் இந்த மானியப் பணம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

ஆனால் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்தால் இந்த மானியத்தை வாங்கி விடலாம் என்கிற போக்குதான் கடந்த சில வருடங்களாக நிலவி வருவதாகச் சொல்கிறார்கள்.

தவிர ஏகப்பட்ட கோல்மால்கள் இந்த திரைப்பட மானியத்தின் பின்னாலும் ஒளிந்திருப்பதாகக் குமுறுகிறார்கள் திரைத் துறையினர்.

நாஞ்சில் அன்பழகன், அதிமுக

அதிமுகவின் கலைப் பிரிவுச் செயலாளரும் இயக்குநருமான நாஞ்சில் பி சி அன்பழகன், 'கோயம்புத்தூர் லைப்ரரி போலி புத்தக முறைகேட்டைப் போல இங்கயும் ஏகப்பட்ட தில்லுமுல்லு, முறைகேடுகள் நடந்திட்டிருக்கு. ஒரு தயாரிப்பாளரா நானுமே இந்த மானியத்தை கடந்த காலங்கள்ள வாங்கியிருக்கேன். ஆனா அதிமுக ஆட்சிக் காலத்துல கட்சி பேதம் பார்க்காமதான் லிஸ்ட் தயார் செய்து வழங்கினோம். ஆனா திமுக ஆட்சியிலயும் சரி, அவங்க பாணியிலேயே ஆட்சி நடத்தற இந்த தவெக ஆட்சியிலயும் சரி, ஏகப்பட்ட மோசடிகளை அரங்கேற்றியிருக்காங்க.

கேளிக்கை வரிச் சலுகை பெற்ற படங்கள் மானியத்துக்குத் தகுதி பெற்றவைதான் கடந்த கால நடைமுறை. ஆனா இப்ப வெளிவந்த பட்டியல்ல வரிச் சலுகை பெற்ற பல படங்கள் விடுபட்டிருக்கு. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சினிமாவைக் கன்ட்ரோல்ல எடுக்கறதுங்கிறது தெரிஞ்ச விஷயம்தான். இந்த மானியத்துக்கு படங்களைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவானது திமுக அரசால் அமைக்கப்பட்டதுதான்.

அந்தக் குழுவையே முறையாச் செயல்பட விடாம சில திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள் லாபி செய்ததாப் பேச்சு வந்தது.

நிலைமை இப்படி மோசமானதா இருக்க, மத்த விஷயத்துலல்லாம் திமுக முடிவு செய்த டென்டரை கேன்சல் செய்யறது மாதிரியான நடவடிக்கைகளை எடுத்த தவெக அரசு இந்த மானிய விஷயத்துல மட்டும் திமுக அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த தயாரிப்பாளர்களுக்கு மானியத்தை தர எப்படி சம்மதிச்சதுனு தெரியலை. செய்தித் துறை அமைச்சர் இந்த பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டாமா' என்கிறார் .

மானியம் பெறத் தகுதியான படங்களைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுதான் 2015 டு 2022 வரையிலான காலத்துக்கு 200க்கும் மேற்பட்ட படங்களைத் தேர்வு செய்தது.

நடிகை ரோகிணி, நடிகர் பசுபதி உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கியது ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணன். நடந்த விழாவுக்கு அவர் உட்பட குழு உறுப்பினர்கள் எவருமே அழைக்கப்படவில்லை.

என்ன காரணம்? குழு வெளிப்படையாக இயங்கியதா? குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசிய போது,

பெயர் வேண்டாமெனக் கேட்டுக் கொண்டு பேசத் தொடங்கினார் அந்த தயாரிப்பாளர்...

udhayanidhi stalin

''கஷ்டப் படுகிற தயாரிப்பாளர்களுக்கு இது நல்ல திட்டம். ஆனா லாபி செய்பவர்களும் அவங்களுக்கு உதவி செஞ்சு அதன் மூலம் ஆதாயம் அடைகிற துறையில இருக்கிற சிலரும் கூட்டு சேர்ந்துக்கிட்டு எல்லா தகிடுதத்தங்களும் செய்றாங்க.

குழு உறுப்பினர்கள் படங்களைப் பார்த்து தேர்வு செய்து தர்றதுக்கு சம்பளம் தரப்படுது. ஆனா நான் சொன்ன அந்த லாபி கும்பல் உறுப்பினர்களைப் படம் பார்க்கவே விடறதில்லை. நானெல்லாம் போராடித்தான் சில படங்களைப் பார்த்தேன். 'இது எந்தளவு உண்மைனு தெரியல, சின்னவரு ஓ கே செஞ்சுட்டார்'னு அப்ப துணை முதல்வர் பெயரையெல்லாம் பயன்படுத்தினாங்க. இந்த கச்சடா பாலிடிக்ஸ் பார்த்து சில உறுப்பினர்கள், அவங்க சொன்னபடி படங்களைப் பார்க்காமலேயே கையெழுத்துப் போட்டுட்டுப் போனதும் நடந்தது.

vijay

நான் சொன்ன அந்த லாபி கும்பலின் தலையீட்டால்தான் தேர்வுக் குழுவை ஒரு மரியாதைக்கு கூட கூப்பிடாம விழாவை நடத்தியிருக்காங்க. என்னதான் கடந்த ஆட்சியில நியமிக்கப் பட்ட குழுவா இருந்தாலும் தலைவரையாவது விழாவுக்கு அழைச்சிருக்கலாம்.

நாங்க செஞ்ச வேலைக்காகவாவது கொஞ்சம் மதிச்சிருக்கலாம்.

அதேபோல இன்னொரு சந்தேகமும் எங்களுக்கு இருக்கு. குழு உறுப்பினர்களுக்கு கடைசி வரை தேர்வான படங்களின் மொத்த பட்டியல் தரவே இல்லை. இந்த இடத்துல ஒரு சந்தேகம் வருது. நாங்க தேர்வு செய்த படங்களுக்குத்தான் மானியம் தந்தாங்களா இல்ல, பட்டியல்ல திருத்தம் கிருத்தம் பண்ணினாங்களான்னு. எது எப்படியோ முடிஞ்சுது முடிஞ்ச‌ போச்சு. இனி வருங்காலங்கள்லயாச்சும் இந்த திட்டத்துல எந்தவொரு சர்ச்சையும் வராதபடி நிஜமாகவே தகுதியான படங்களுக்குக் கிடைக்க முதல்வர் வழி செய்யணும்' என்கிறார் இவர்.

துறை அமைச்சரும், அந்த துறையில் இருந்து வந்த முதல்வரும் கவனிப்பார்களா?

15 Years Of Anirudh: "எண்ணற்ற நினைவுகள்; துரத்த வேண்டிய மில்லியன் கனவுகள்!" - நெகிழும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் 'வை திஸ் கொலவெறி டி' பாடல் வெளியாகிப் பயங்கர ஹிட்டடித்தது. 15 வருடங்களில் எண்ணற்ற ஹிட் ப... மேலும் பார்க்க

O.M: "புட்டபர்த்தி சாய்பாபா அவர்களே கையில் தூக்கிப் பெயர் வைத்த குழந்தை சாய் பல்லவி!" - தனுஷ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்றைய தினம் க... மேலும் பார்க்க

O.M: "விஜய் சார் இனி நடிக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்; அதனால் தனுஷ் சார்.!" - சாய் பல்லவி

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஓ.ம் படத்தில்...இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்... மேலும் பார்க்க

O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்க... மேலும் பார்க்க

Sandiyar: "அப்போதே 'சண்டியர்' என்ற பெயரில் படம் வெளியாகிவிட்டது" - படத் தலைப்பு குறித்து தமிழ்குமரன்

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

Scene: "இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” - சூர்யா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேச... மேலும் பார்க்க