உ.பி: திருட வந்த இடத்தில் இரட்டை கொலை... பாலியல் வன்கொடுமை; இளைஞரை சுட்டுப் பிடி...
மும்பை: மனைவியை அமர வைத்து எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர்!
பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் மும்பை வந்துள்ளார். இளவரசர் வில்லியம், வருடாந்திர சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தன் மனைவியுடன் நேற்று மும்பை வந்தார். நேற்று இரவு வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்தரின் ஆகியோர் மும்பையில் நடைபெற்ற எர்த்ஷாட் பரிசு 2026 தாக்க மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் உலகளாவிய வணிகத் தலைவர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர். இதில் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு பற்றி வில்லியம் பேசினார். 2026 ஆம் ஆண்டுக்கான எர்த்ஷாட் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய கண்டுபிடிப்புகள், மகிலா ஹவுசிங் டிரஸ்ட் மற்றும் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி ஆகியவை மலிவு விலையில் வீடுகள் மற்றும் தூய்மையான நகர்ப்புற போக்குவரத்தில் பணியாற்றியமைக்காக அவர் பாராட்டினார்.

அதன் பிறகு பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி, சச்சின் டெண்டுல்கரை சந்தித்து பேசினார். அதோடு மும்பை மெட்ரோவில் பயணம் செய்தார். இன்று இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் இ-ரிக்ஷா சவாரி செய்து 2வது நாளைத் தொடங்கினர். இங்கிலாந்தின் வருங்கால மன்னன் வில்லியம் தனது மனைவியை பின்னால் அமர வைத்து மின்சார முச்சக்கர வண்டியை ஓட்டினார்.
பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக எர்த்ஷாட் பரிசின் இறுதிப் போட்டியாளர்களை சந்திப்பதற்காக தம்பதியினர் மஹிந்திரா இ-ரிக்ஷாவில் வந்து இருந்து இறங்கினர். வில்லியம் மற்றும் கேட் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் வில்லியம் மனைவிக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதன் சிகிச்சைக்கு பின்னர் அவர்களது முதல் கூட்டு வெளிநாட்டு பயணம் இதுவாகும். அவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கின்றனர்.
















