செய்திகள் :

உ.பி: திருட வந்த இடத்தில் இரட்டை கொலை... பாலியல் வன்கொடுமை; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் ரயில்வே டிக்கெட் விற்பனையாளர் சஞ்சீவ் வீட்டில் கடந்த 5ம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த 23 வயது வாலிபர் ஒருவர் பணம் திருடுவதற்காக நுழைந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் விழித்துக்கொண்டனர். இதனால் அந்த வாலிபர் தம்பதிகளை கொலை செய்தார். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்தச் சம்பவத்தில் அந்தத் தம்பதியினரின் மகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு பிறகு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர் அங்குள்ள வனப்பகுதிக்குள் மறைந்து இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடினர். இதில் ஒரு வாரத்திற்குப் பிறகு, யோகேஷ் என்கிற அந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சஞ்சீவ்

அவரை கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயன்றார். இதனால் போலீஸார் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவரின் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டன.

அவரை கைது செய்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``விசாரணையின் போது, ​​அந்த நபர் தான் அடிக்கடி அந்தத் தம்பதி வசிக்கும் பகுதிக்குச் சென்று வந்ததாகக் கூறினான். ஒரு நாள், ரயில்வே டிக்கெட் விற்பனையாளராகப் பணிபுரிந்த 32 வயது கணவர், பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதைக் கவனித்ததாகவும், அவருடன் அவரது மனைவி ஷிகா வருவதை அடிக்கடி பார்த்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்ததாகக் கூறிய அவர், கணவர் விழித்திருப்பதைக் கண்டதும், அவரை மரக்கட்டையால் தாக்கியதாகவும், அதனால் அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

அந்தப் பெண் கூச்சலிட்டு உதவி கோர முயன்றார், ஆனால் அவரது செல்போனைப் பறித்து அணைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தாக்கி, அவரது துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணை கொலை செய்த பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களது மகள் இத்தாக்குதலில் காயம் அடைந்ததாகவும் யோகேஷ் தெரிவித்தார்" என போலீஸார் தெரிவித்தனர். போலீஸாரை கண்டதும் யோகேஷ் துப்பாக்கியால் சுட்டதாகவும், எனவே பாதுகாப்புக்காக திரும்ப சுட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

``ஸ்கூட்டர் கொடுத்து உதவிய மீனாட்சி; நிஷாந்த் சிக்கக் காரணமான டாட்டூ!" - காவல் ஆணையர் பேட்டி

மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், மாநகர தெற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, " நகைக்கடையில் ... மேலும் பார்க்க

பஞ்சாப் காவலர் கொலை; காவல்துறையினருக்கு மிரட்டல்; பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்?

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்குச் சற்று முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட... மேலும் பார்க்க

2 கிலோ தங்கம் கொள்ளை; எதிர்கடைக்காரரின் மாஸ்டர் பிளான்; முன்னாள் ஊழியர் உட்பட ஐவர் சிக்கிய பின்னணி!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சாலா பகுதியில் 'வைஷ்ணவி ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் தங்கம் சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தகுமார். கடந்த வியாழக்கிழமை இரவு 10... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய த.வெ.க-வினர் கைது - கட்சிப் பதவியும் பறிப்பு!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது பைக்கில் ஹோட்டலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்ணி... மேலும் பார்க்க

சென்னை: பணம் வாங்கிக் கொண்டு போக்சோ வழக்கு பதிவு - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணா (40). இவர் திருமண இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்ததும் சுரேஷ் கண்ணாவுக்கு பிடித்... மேலும் பார்க்க

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: சிக்கிய நிஷாந்த்; பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் தூக்கிய போலீஸ்!

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற... மேலும் பார்க்க